பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

carotid

258

carpal tunnel syn...


சுமார் 100 நிறமிகளின் தொகுதி. இவை பெரும்பாலும் செடிகளில் காணப்படுகிறது. இவற்றில் சில கரோட்டின்கள் ஆகும்.

carotid; கழுத்துத் தமனி; தலைத் தமனி : கழுத்தின் இருபுற முள்ள பெரும் குருதி நாளங்கள் இரண்டில் ஒன்று இது தலைக்குக் குருதியை கொண்டு செல்கிறது.

கழுத்துத் தமனி

carphology : சன்னிச் சேட்டை : உணர்வு தன்வசமிழந்த நிலையில் படுக்கை, துணி முதலியவற்றை தாறுமாறாகப் பிடித்து இழுத்தல்.

carotidynia : கரோட்டிடைனியா : ஒருபக்கம் கழுத்தின் மத்தியில் உற்பத்தியாகி, அதே பக்கத்து முகம், காது, தாடை, பல் அல்லது கழுத்துக்குக் கீழே வரை ஒரேசமயத்தில் அவ்வப்போது பரவுகிற இலேசான வலி. இது கழுத்து தமனி மீதான தொட்டுணர்வு மென்மை, அதன் மேலுள்ள திசுக்களின் உணர்விழப்பு ஆகியவற்றுடன் ஏற்படுகிறது.

carpal : மணிக்கட்டு எலும்பு : மணிக்கட்டிலுள்ள எலும்பு எதுவும்.

மணிக்கட்டு எலும்பு

carpal tunnel syndrome : மணிக்கட்டு எலும்புக்குழாய் நோய்க் குறித் தொகுப்பு : கையிலுள்ள நடுநரம்புப் பகிர்மானப் பகுதியில் ஏற்படும் இரவு நேர நோவு,