பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

carver

260

caseinogen


வாயில் மூவிதழ் சுருக்கமுடைய நோயாளிகள் மூச்சிழுக்கும் போது இதயச் சுருக்கத்துக்கு முன்பு ஏற்படும் முணுமுணுப்பு ஒலி அதிகமாக இருத்தல். இதனை உட்கார்ந்த நிலையில் நன்கு கேட்கலாம். ரிவெரோகார்வாலோ என்ற மெக்சிக்கோ மருத்துவரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

carver : செதுக்குக் கத்தி : பல் மருத்துவத்தில் உலோகப்பூச்சு அல்லது மெழுகு மாதிரியை செதுக்குருவாக்கம் செய்வது போல் ஒரு பொருளை வடிவம் அமைப்பதற்குப் பயன் படுத்தப்படும் ஒரு கத்தி அல்லது ஒரு கருவி.

cascade : தொடர்செயல்முறை : தானே பரப்பும் அல்லது விரிகாக்கம் செய்யும் ஒரு தொடர்ச்சியான செயல்முறை. இதில், இறுதிக் கட்டத்தை எட்டும் வரையில், ஒவ்வொரு செயல்முறையும் அடுத்த செயல் முறையைத் தொடங்கி வைக்கிற வகையில் அமைந்த தொடர் செயல்முறைகள் அமைந்திருக்கும்.

cascara : குடலிளக்கப்பட்டை : குடலிளக்கும் மருந்தாகப் பயன் படும் வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில மரப்பட்டை வகை. இப்பட்டையிலிருந்து மாத்திரைகளும், திரவமும், வடிநீரும் தயாரிக்கப்படுகின்றன.

case : நோய் நிகழ்வு : (1) நோய் நிகழ்தல் (2) ஒரு நோயாளி (3) உறை.

caseate : பாலுறைவு : உறைபாற் கட்டியாக மாறுதல்.

caseation : உறைச்சளிக் கட்டி; பாலாடைக் கூழ்மை : காச நோயில் ஏற்படுவது போன்று ஒரு மென்மையான பால் போன்ற சளிக்கட்டி உருவாதல்.

case-book : மருத்துவத் தொழில் முறைக்குறிப்பேடு.

case hardening : கரியகக் கடும்பதப்படுத்தல் :பரப்பில் கரியக மூட்டுவதன் மூலம் இருப்பைக் கட்டுப்படுத்துதல்.

casein : பால் புரதம் : உறைபால் கட்டியின் அடிப்படைக் கூறு. பால் இரைப்பையில் நுழைந்ததும் உண்டாகிற ஒருவகைப் புரதம். இது கால்சியத்துடன் இணைவதால் திட்பமாகிறது.

caseinogen : பால் புரதமூலம் : பாலிலுள்ள முக்கியமான புரதம். இது நீரில் கரைவ தில்லை. ஆனால் கரிமமில்லா உப்புகளினால் (அனங்க உப்புகள்) இது பாலில் கரைசலாக வைத்திருக்கப்படுகிறது. நீரில் கரையக் கூடியதும் கரைந்து வெப்பத்தால் கட்டியாகக்கூடியதுமான பால் கருப்புரதத்தின் வீத அளவு, தாய்ப்பாலை