பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

caseous

261

castle's intrinsic...


விடப் பசும்பாலில் அதிகம். பால் உறைவிக்கும் பொருள் (ரென்னின்) இருப்பதால் பால் கருப்புரதம் கரையாத பால் புரதமாக மாற்றப்படுகிறது.

caseous : உறைபாற்கட்டி சார்ந்த : (1) பாற்கட்டியை ஒத்த. (2) திசுக்கள் பாற்கட்டி போல் உருமாற்றமடைதல்.

caseous degeneration : உறை பால் திசுச்சிதைவு : உறைபால் கட்டி போன்ற அமைப்புடைய திசுக்கள் உருவாதல். மேகக்கட்டி காரணமாகத் திசுக்கள் சத்தின்றித் தேய்ந்து சிதைவதால் இது உண்டாகிறது.

Casilan : கேசிலான் : திரவ உணவுகளை மட்டுமே உண்ணக் கூடிய நிலையிலுள்ள நோயாளிகளுக்குப் போதிய புரதம் கிடைக்கும்படி செய்வதற்காகக் கொடுக்கப்படும் ஒருவகைத் தூள் மருந்தின் வணிகப் பெயர். இதில் 90% புரதம் அடங்கியுள்ளது.

Casoni test : நீர்க் கட்டிச் சோதனை : கிருமி நீக்கிய நோய் நீர்த் தேக்கத் திரவத்தை 0.2 மி.லி. அளவு ஊசி மூலம் செலுத்தி செய்யப்படும் சோதனை. வெண்னிறக் கொப்புளம் தோன்று மானால், அது நோய் நீர்த்தேக்கக் கட்டி இருக்கிறது என்பதைக் குறிக்கும்.

cassava : கூவைக்கிழங்கு : நார்ச்சத்து மிக அதிகமாக உள்ள கூவைக் கிழங்கின் வேர், மர வள்ளிக் கிழங்கு.

cassette : ஊடுகதிர்ச்சுருள் பேழை : ஊடுகதிர்ச்சுருளை வைத்திருப்பதற்காக, தீவிரமாக்கிய திரையினையுடைய ஒரு தட்டையான, ஒளி ஊடுருவாத பேழை. படக்சுருள் அல்லது காந்த நாடாவுக்கான ஒரு பேழை. உயிரணுக்கரு மையம் சூழ்ந்த டிஎன்ஏ-இன் ஒரு கூறு. இதற்குப் பதிலாக, இடைமாற்றம் மூலம் மற்றொரு டிஎன்ஏ வரிசையை அமைக்கலாம்.

cast : வார்ப்புரு : (1) பல் மற்றும் தாடையின் ஒரு நேர் படிவம். இதன் மீது பல்தொகுதி ஆதாரங்கள் செய்யப்படுகின்றன. (2) ஒரு பல் கருவியின் மெழுகுப் படிவத்தின் துல்லியமான உலோகப் படிவத்தை எடுத்தல். (3) ஒரு பொருள் எந்த உறுப்பின்மீது படிந்துள்ளதோ அந்த பொருளின் வடிவத்தில் உருவாக்கப்பட்ட பொருள். (4) எலும்புமுறிவு அல்லது இடப்பெயர்வு ஏற்பட்ட இடம் அசையாமல் இருப்பதற்காகப் போடப்படும் இறுக்கமான படைக்கட்டு.

castle's intrinsic factor : கேசில் உள்ளார்ந்த காரணி : இரைப்பையில் சுரக்கும் ஒரு பொருள்.