பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

castor oil

262

catabolite


இது பி-12 வைட்டமினைச் சீரணிப்பதற்கு இன்றியமையாதது. இந்த வைட்டமின் இல்லை என்றால், கடுங்குருதிச் சோகை உண்டாகும். அமெரிக்க மருத்துவ அறிஞர் வில்லியம் கேசில் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

castor oil : விளக்கெண்ணெய்; ஆமணக்கு நெய் : ஆமணக்கு விதையிலிருந்த எடுக்கப்படும் எண்ணெய். குடலிளக்க மருந் தாகவும், மசகு எண்ணெயாகவும் பயன்படுகிறது. வேனல் கட்டி, புண் ஆகியவற்றுக்கு துத்தநாகக் களிம்புடன் சேர்த்து மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

castrated : விதையடிப்பு : விந்தகம் (அண்டம்) எனப்படும் விரைகளை அல்லது கரு அண்டத்தை நீக்கு வதன் மூலம் இனப்பெருக்க ஆற்றல் அழிக்கப்படுதல்.

castrate : விதையடி : விரைகளை அல்லது கரு அண்டத்தை நீக்குதல்.

castration : விரை நீக்கம்; ஆண்மை நீக்கம்; காயடித்தல் : ஆண்களின் விரையை அல்லது பெண்களின் கருப்பையை அறுவைச்சிகிச்சை மூலம் நீக்குதல். இயக்கு நீர் (ஹார்மோன்) சார்ந்துள்ள புற்றுநோய்க்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக இவ்வாறு செய்யப்படுகிறது.

casualty : விபத்து : (1) காயம் அல்லது மரணம் உண்டாகும் ஒரு விபத்து. (2) விபத்தில் காயமடைந்த கொல்லப்பட்ட ஒர் ஆள். (3) மருத்துவமனையில் விபத்து நோயாளிகளுக்கு அவசரச் சிகிச்சை அளிப்பதற்காக தனியாக அமைக்கப்பட்டுள்ள இடை விபத்து அரங்கம்.

casuistics : நோய் ஆய்வியல் : ஒரு நோயின் பொதுவான தன்மைகளை அறுதியிடுவதற்காக நோய் நிகழ்வுப் பதிவணங் களைப் பகுப்பாய்வு செய்தல்.

catabolism (or KATABOLISM) : உயிர்ப்பொருள் மாறுபாடு; வளர்ச் சிதை மாற்றம்; சிதைவியம்; உயிரியச் சிதைவு : உயிர்ப் பிராணியின் உடலில் ஏற்படும் தொடர்ச்சியான வேதியியல் வினைகள். இந்த வினைகளினால், உணவாக உட்கொள்ளப்படும் சிக்கலான பொருள்கள், எளிமையான பொருள்களாகப் பகுக்கப்படுகின்றன. அப்போது ஆற்றல் வெளிப்படுகிறது. இந்த ஆற்றல் உடலின் உயிர்ப் பொருள் கட்டமைப்புக்கும் பிற நடவடிக்கைகளுக்கும் இன்றியமையாதவை.

catabolite : வளர்சிதை மாற்றப் பொருள் : அழிவு உண்டாக்கும் உயிர்ப்பொருள் வேதியியல் மாறுபாட்டில் உண்டாகும் ஒரு பொருள்.