பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Catarrhal

264

catheter


நீர்க்கோப்பு; சளிச்சவ்வு அழற்சி.

catarrhal : சளிச்சவ்வு அழற்சிக்குரிய.

catatonia : மாறாட்டக் கோளாறு : கரிமம் சாராத கோளாறுகளில் இயக்க முரண்பாடுகள். இதில், அதிகரித்த மனவலிமையும், நிலையான தோரணைகளும் உண்டாகும். இது நினைவு சொல் செயல்மாறாட்டக் கோளாறாகும். இது அடிக்கடி உணர்விழப்புடன் கூடிய பித்த நிலையில் உண்டாகும்.

catatropia : கண்கவிழ் நோய் : இரு கண்களும் கீழ் நோக்கியே பார்த்திருக்கும் ஒரு நிலை.

cat bite fever : பூனைக்கடிக் காய்ச்சல் : பூனைக்கடி காரண மாக பாஸ்டியூரிலா மல்ட்டே சிடோ என்ற கிருமியினால் உண்டாகும் நோய். இதனால் தடுப்பூசி போடும் இடத்தில் கீழ்க்கட்டும், மூட்டுவலியும் உண்டாகிறது.

catecholamine : கேட்டகோலமைன் : உயிரியல் முறையில் மிகுந்த வினையூக்கமுடைய இரண்டு அமீன்களில் ஒன்று. எபினெஃப்ரைன் (அட்ரின லைன்), நோர் எபினெஃப்ரலன் (நோர் அட்ரினலைன்) ஆகியவை அந்த இரு அமீன்கள். இவை நரம்பு மண்டலத்தின் மீது முக்கியமான விளைவைக் கொண்டிருக்கின்றன.

catgut : நரம் பிழை; தையல் நரம்பு : விலங்கின் குடல், தசை நாளங்களிலிருந்து இழைக்கப்படும் நரம்பிழை அல்லது நரம்புக் கம்பி.

cathartic : பேதிமருந்து : குடல் கசடுகளை நீக்குவதற்குக் குடல் இளக்கம் உண்டுபண்ணுகிற பேதியாகிற மருந்து. இது மலக்கட்டு அதிகமாவதைத் தடுக்கிறது.

cathepsin-D : கேத்தெப்சின்-D : கருப்பை இயக்குநீரால் தூண்டப்படும் லைசோசோமல் புரீசாட்னேஸ். மார்பக எலும்புப் புற்றின்போது இதன் அளவை அதிகரிக்கலாம்.

cathersils : கசடு நீக்கம்; தூய்மையாக்கி; (குடல்) கழுவல் : வயிற்றிளக்கம்; பேதி, குடல் கசடு நீக்கம், உளவியலில், மன நோயாளியின் உணர்ச்சியைத் தூய்மைப்படுத்துதல்.

catheter : ஊடு குழல்; வடிகுழாய்; வடிகுழல் : நீர்மம் அல்லது வாயுக்களை உடற் குழாய்களில் ஏற்றவோ வடிய விடவோ உதவும் குழல். இது ரப்பர், நெகிழ்வுக் கண்ணாடி, வெள்ளி போன்ற உலோகங்கள், குழைமப்பொருள்கள் ஆகியவற்றால் தயாரிக்கப் படுகின்றன. அண்மையில், இழைம ஒளியியல் இதய இறக்கும் குழல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதிலுள்ள ஒளித்