பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

catheterise

265

caul


துடிப்புகளைக் கொண்டு இரத்தத்தில் ஆக்சிஜனின் பூரித அளவைக் கணக்கிடலாம்.

catheterise : குழல் செருகல் : ஒர் உறுப்பினுள் இறங்கு குழலைச் செலுத்துதல். பொதுவாக, இது தேங்குபை,குழல் செருகலைக் குறிக்கிறது.

catheterization : இறங்குங்குழல் அளவீடு; குழல் செலுத்துகை : சிறு நீர்ப்பை, இதயக்குழாய், நரம்புகள் ஆகியவற்றை இறக் குங்குழலை இறக்கி அழுத்தத்தை அளவிடுதல்.

cathexis : மனஅவா ஆற்றல் : ஒரு பொருள் அல்லது கருத்து சார்ந்த மனஅவா ஆற்றலின் அளவு.

cathode : எதிர்மின்வாய் : 1. எலக்டிரான்கள் வெளிப்படும் எதிர்மின்வாய். 2. ஒரு வெற்றிடக் குழாயிலுள்ள எலக்டிரான் கற்றை ஆதாரம்.

catholicon : பல நோய் மருந்து : சஞ்சீவி.

cation : நேர்மின் அயனி : எதிர் துருவத்துக்கு நகர்கிற ஒரு நேர்மின்னேற்றத்துடன் கூடிய ஒர் அயனி.

cat-scratch fever : பூனைக்கீறல் காய்ச்சல் : பூனை பிறாண்டுவதால் உண்டாகும், கிருமியினால் பரவும் நோய். இந்நோய் கண்டவர்களுக்கு, பூனை பிறாண்டிய ஒரு வாரத்திற்குப் பிறகு காய்ச்சலும் சுரப்பி வீக்கமும் ஏற்படும்.

cat-scratch disease : பூனை பிறாண்டல் நோய் : பூனை பிறாண்டியதால் அல்லது கடித்ததால் உண்டாகும் நோய். இதில், கொப்புளம், அல்லது நிணநீர் கரணை உண்டாகும். இது ஒரு வகைப் பாக்டீரியத்தினால் உண்டாவதாகும். இது தானே வரம்புறுத்தும் நோய் என்றும் கருதப்படுகிறது.

cauda : வால் : ஒரு வால் அல்லது வால் போன்றதொரு துணையுறுப்பு.

caudal : வால் சார்ந்த : 1) வால் போன்ற கட்டமைப்புடைய. (2) வால் பக்கமாக உள்ள.

caudal anaesthetic : வால்வழி செலுத்தும் மயக்க மருந்து : இடுப்பு மூட்டு முக்கோண எலும்பிலுள்ள வால் குழாயின் வழியாகச் செலுத்தப்படும் மயக்க மருந்து. -

caudate : வாலுடைய : தலை, உடல் என பகுக்கக்கூடிய வளைவான நீண்ட பழுப்புநிறப் பொருள் திரட்சியுடைய.

caul : தலைக் கவச மென்தோல் : மகப்பேற்றின்போது குழந்தை தலையைக் கவிந்துள்ள மென் தோல்.