பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cauliflower ear

266

cavitation


cauliflower ear : பூக்கோசுக் காது : குத்துச் சண்டையின் காயங்களினால் நிலையாகத் தடிப்புப் பெற்று விட்ட காது.

cauliflower growth : பூக்கோசு வளர்ச்சி : விரைந்து பரவக்கூடிய, தன்னியல்பாக வளரத்தக்க புற்று நோய் வகை. பாதிக்கப்பட்ட பரப்பில் இது திடீரென ஒரு வீண்தசைத் திரட்சியாக எழுகிறது. causalgia : தோல் நரம்பு வலி; எரிச்சல் வலி; எரிக்குத்து வலி :தோலைச் சார்ந்த நரம்பில் ஏற்படும் புற அதிர்ச்சிப் புண்ணில் இருந்து உண்டாகும் கடும் வேதனை தருகிற நரம்பு வலி, இதனைத் தன்னியல்புப் பிரிவு வலி என்றும் கூறுவர்.

caustic : கடுங்காரம்; எரிகாரம்; எரி : உயிர்ப்பொருளான இழை மங்களை உரித்து தின்னும் எரிச்சல் தரும் பொருள். ஆறி வரும் புண்மீது முதலில் உருவாகும் புதுவளர்ச்சி. திசுக்கள், பால் உண்ணிகள் போன்ற மிகை வளர்ச்சிகளை நீக்குவதற்கு இது பயன்படுகிறது. கார்போலிக் அமிலம். கார் பன்டையாக்சைடுக் குழம்பு, வெள்ளி நைட்ரேட்டு ஆகியவை இவ்வகையைச் சேர்ந்த, மிகுதியாகப் பயன்படுத்தப்படும் பொருள்களாகும்.

cauterisation : சூடுபோடுதல் : நோயுற்ற திசுக்களை அழிப்ப தற்காக அல்லது அவை குணமாவதைத் துரிதப்படுத்து வதற்காக, ஒரு கடுங்காரப் பொருளினால் மின்னோட்டத்தினால், சூட்டுக்கோலினால் சூடுபோடுதல் அல்லது உறையச் செய்தல்.

cauterise : சூடு இடுதல், தீய்த்தல்; மின் வழித் தீய்த்தல்; மின் எரிவு : ஒரு சூட்டுக்கோல் கொண்டு புண்ணைச் சுட்டுத் திசுக்களை அளித்தல்; காரப்பொருளினால் புண்ணைச் சுட்டுத் திசுக்களை அளித்தல்.

cautery : சூட்டுக்கோல் : மின் விசை, வெப்பம், உறையச் செய்தல், சில்வர் நைட்ரேட், பொட்டாசியம் ஹைடிராக் சைடு, நைட்ரிக் அமிலம் போன்ற கடுங்காரப் பொருள் மூலம் திசுக்களை அழிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம்.

cavernous : குடைவான : ஆப்பு எலும்பின் இருபுறமும் உள்ள, உள்நாளக் குருதிக்குரிய குடைவான எலும்பு உட்புழை வழி. இது உதடுகள், முக்கு, கண் குழிகள் ஆகியவற்றிலிருந்து இரத்தத்தை வடிக்கிறது. இந்தப் பகுதிகளில் ஏற்படும் குருதி நச்சுப்பாட்டினால், குடைவு எலும்பு வழி அழற்சி உண்டாகிறது.

cavitation : திண்பொருள் குழிவுகள்; பொந்தாதல் : நுரையீரல்