பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

celi counter

268

cementoblast


இதயச்செவுள் ஆகியவற்றின் நீர்மங்களில் காணப்படும் சளி, உமிழல், சிதைபொருள் ஆகியவற்றிலிருந்த பெறப்படும் கன் மெழுகில் பதித்த மாதிரிப் பொருள்.

cell counter : உயிரணுக்கணிப்பான் : உயிரணுக்களைக் கணக்கு இடுவதற்காகப் பயன்படுத்தப் படும் ஒரு மின்னணுக் கருவி.

cell culture : உயிரணு வளர்ப்பு : ஆய்வுக்கூடத்தில் உயிரணுக்களை வளர்த்தல்.

cell-free : உயிரணுவற்றவை : உயிரணுக்கள் எவையும் இல்லாதிருக்கிற நீர்மங்கள், திசுக்கள்.

cell junction : உயிரணு சந்திப்பு : இரு உயிரணுக்களிடையிலான அவற்றினால் அளிக்கப்படுகிற ஒட்டுந்தன்மையுடைய உயிரணுக் கிடையிலான சந்திப்புப் பகுதி.

cell kinetics : உயிரணு இயக்கவியல் : உயிரணுக்கள் அவற்றின் வளர்ச்சி, பிளவு ஆகியவை பற்றி ஆய்வு செய்தல்.

cell mass : உயிரணுத் திரள் : ஒர் உறுப்பாக அல்லது உருவமைப்பாக உருவாகிற உயிரணுக்களின் ஒரு தொகுதி.

cellophane : பொதிபொருள் (செலோஃபேன் : மரப்பசைச் சத்தினின்றும் செய்யப்படும் பளிங்குநிறத் தாள் போன்ற பொதி பொருளின் வணிகப் பெயர்.

cellular : உயிரணுச்சவ்வு : உயிரணு தொடர்பான, உயிரணு விலான அல்லது உயிரணுவிலிருந்து பெறப்பட்ட சவ்வுப் பொருள். இது ஒவ்வொரு உயிரணுவையும் சூழ்ந்திருக்கும். இது உயிரணுவுக் குள்ளேயும், அதிலிருந்து வெளியேயும் பொருள்கள் செல்வதைக் கட்டுப்படுத்துகிறது.

cellulitis : இழைம அழற்சி; புரையோடுதல்; உயிரணு அழற்சி

புறத்தோலுக்கு அடுத்துத் கீழுள்ள இழைமத்தின் அழற்சி அல்லது வீக்கம்.

cellulose : மரக் கூறு (செல்லுலோஸ்) : செடியினங்களின் மரக்கட்டைகளுக்கும் பருத்தி போன்ற இழைமங்களுக்கும் உயிர்மங் களின் புறத்தோட்டுக்கும் மூலமான பொருள்.

celsius : செல்சியஸ் : ஆண்டர்ஸ் செல்சியஸ் (1701-1744) கண்டு பிடித்த நூற்றளவையாகப் பகுக்கப் பட்ட நூற்றளவை வெப்பமானி.

cement : காரை : உரியமுறையில் தயாரிக்கப்படும்போது உறுதியான திரள்பொருளாக இறுகி விடக்கூடிய ஒருபொருள்.

cementitis : பல்காரை அழற்சி : பல்காரையில் ஏற்படும் வீக்கம்.

cementoblast : பல்காரையணு : வளரும் பல்லின் உள்படலத்தின்