பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cementoclasia

269

centrifuge


அல்லது பல் உள் பையின் ஒர் உயிரணு.

cementoclasia : பற்காரைச் சிதைவு : ஒரு பல்லின் வேர்ப் பகுதியின் காரை சிதைந்து போதல்.

cementogenesis : கற்கூழ் காரை வளர்ச்சி : ஒரு பல்லின் பற்கூழின் வேரிலுள்ள காரையின் வளர்ச்சி.

cementum : பற்காரை : பல்லின் வேர்ப்பபகுதியை முடியிருக்கும் சுண்ணமாக மாறிய திசுப் படுகை.

censor : உள்ளுணர்வு; பகுத் தடக்கி : அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உணர்ச்சிச் சிக்கல்கள் உணர்த் தளத்தில் தோன்றாதபடி தடுக்கும் உள்ளுணர்வு.

census : கணக்கெடுப்பு : மருத்துவ மனையிலுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்தல்.

centigrade : சென்டிகிரேடு : 1, 100 பாகை கொண்ட, 2. 100* அளவாகப் பகுக்கப்பட்ட ஒரு வெப்பமானி.

centigram : சென்டிகிராம் : ஒரு கிராமின் நூற்றில் ஒரு பகுதி.

centilitre : சென்டிலிட்டர் : ஒரு லிட்டரில் நூற்றில் ஒரு பகுதி.

centimetre : சென்டிமீட்டர் : ஒரு மீட்டரின் நூற்றில் ஒரு பகுதி அங்குலத்தை 2.54 மூலம் பெருக்குவதன் மூலம் சென்டி மீட்டராக மாற்றலம்.

centiped : பூரான் : இது நூற்றுக் கால் பூச்சிவகையைச் சேர்ந்தது. இது பல பகுதிகளைக் கொண்ட தட்டையான நீண்ட உடலைக் கொண்டது.

central core myopathy : தசை நலிவு உள்மையம் : அது தன் இனக்கீற்று ஆதிக்கம்பெற்ற தசைநலிவுநோயின் உள் மையம். இது கைக்குழந்தைகளிடம் அரிதுயில் நிலையையும், மையம் நோக்கிய தசைநலிவையும் உண்டாக்குகிறது.

central venous pressure : மையச் சிரை அழுத்தம் : வலது துவாரத்திலுள்ள இரத்தத்தின் அழுத்த அளவு. இது ஒர் இறங்கு குழல், ஒரு காற்று அழுத்தமானி ஆகியவற்றின் உதவியுடன் அளவிடப்படுகிறது.

centrifugal : விரிமை வளர்ச்சி; நடு விலகிய : மையத்திலிருந்து புறம் நோக்கி விரிவடையும் போக்குடைய நோய். பெரிய அம்மை (வைசூரி) நோயின் கொப்புளம். இவ்வாறு விரி வடையும் தன்மையுடையது.

centrifuge : விரைவேகச்சுழற்சி எந்திரம்; மையவிலக்கி : வெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியி னால் பிரிக்கும் எந்திரம்.