பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cephalomeningitis

271

ceramodontia


மண்டையோடு வழியாக முறிவு செய்தல்.

cephalomeningitis : மூளை அழற்சி : மூளைச்சவ்வு வீக்கம்.

cephalometry : தலையளவுமானி : உயிருள்ள மனிதரின் தலையின் அளவினை அளவிடுதல்.

cephalopathy : மூளைநோய் : தலையை அல்லது மூளையைப் பாதிக்கும் ஒரு நோய்.

cephalopelvic : தலைக்குழி : முதிர்கருவின் தலையின் அளவுக்கும், தாயின் இடுப்புக் குழிக்கும் இடையிலான உறவு.

cephaloridine : சிஃபாலோபோரிடின் : சிஃபாலோபோரினிலிருந்து எடுக்கப்பட்ட ஒரளவு செயற்கையான உயிர் எதிர்ப்புப் பொருள்.

cephalosporin : சிஃபாலோஸ்போரின் : சார்டினியாவில் 1948இல் சாக்கடையிலிருந்து சேகரிக்கப் பட்ட ஒருவகைப் பசளை மண்ணில் இருந்த மண் கிருமிகளிலிருந்து தயாரிக்கப்பட்ட உயிர் எதிர்ப்புப் பொருள்களில் ஒரு பெருங் குழுமம். இதில் இருந்து தயாரிக்கப்பட்ட உயிர் எதிர்ப்பு மருந்துகள் பல நோய்களின் சிகிச்சைக்குப் பயன்படுகிறது.

cephalosporium : சிஃபோலோஸ்போரியம் : மண்ணில் காணப்படும் முக்கியமான காளான் வகை. இவற்றிலிருந்த சிஃபோலோஸ் போரின் உயிர் எதிர்ப்பொருள்கள் பெறப்படுகின்றன.

cephalothin : சிஃபாலோத்தின் : சிஃபாலோஸ்போரின் என்ற நோய் எதிர்ப்பொருளை ஒத்த செம்பாதிச் செயற்கைப் பொருள்.

cephalothoracopagus : தலைக்குழி முதிர்கரு : தலைக்கும் மார்புக் குழிக்கும் ஒத்த நிலையில் உள்ள ஒருங்கிணைந்த முதிர்கரு.

cephalotome : சிஃபாலோட்டோம் : குழந்தை பிறப்பதை எளிதாக்கு வதற்காக முதிர்கருவின் தலையைத் துண்டிப்பதற்கான கருவி.

cephalotomy : முதிர்கருத் தலை அறுவை : குழந்தைப் பிறப்பதை எளிதாக்குவதற்காக முதிர் கருவின் தலையை அறுவை செய்தல்.

cephradine : செஃப்ராடின் : சிறு நீர்க்குழாய்க் கோளாறுகளுக்கு முக்கியமாகப் பயன்படுத்தப் படும் ஒரு கலவை எதிர்ப்புப் பொருள். இது பொதுவாக வாய்வழி கொடுக்கப்படுகிறது. ஊசி வழியாக செலுத்தும் மருந்தும் உண்டு.

ceramodontia : செராமோடோன்ஷியா : பல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் வெண்களிமண் போன்ற பொருள்.