பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ceratitis

272

cerebralism


ceratitis : கண்மேற்சவ்வு அழற்சி.

ceratotome : செராட்டோட்டோம் : விழிவெண்படலத்தை பிளவுறுத்து வதற்கான ஒரு கத்தி.

cercaria : ஒட்டுண்ணிமுட்டைப் புழு : ஒட்டுண்ணிப்புழு வகையின் தொடக்க வளர்ச்சியைச் சேர்ந்த சுதந்திரமாக நீந்தும் முட்டைப் புழு நிலை.

cerea flexibilitas : மெழுகு நெகிழ் திறன் : மெழுகு போன்ற நெகிழ்திறன். ஓர் ஆளை ஒரு நிலையில் வடிவாக்கம் செய்து, அந்த நிலையிலேயே பேணிவர முடியும்.

cereal : தானியம் : கார்போஹைடிரேட்டுகள் (70%-80%), புரதம் (8%-15%), இழைமம் அடங்கியுள்ள கோதுமை , பார்லி, ஒட்ஸ் போன்ற உணவு தானியம்.

cerebellar,cerebellous : இறு மூளைக்குரிய : சிறுமூளை பற்றிய.

cerebellospinal : சிறுமூளை-தண்டுவடம் சார்ந்த : சிறு மூளை, தண்டு வடம் ஆகியவை தொடர்பான.

cerebellum : சிறுமூளை : தலையின் பின்பக்கத்திலுள்ள மூளையின் பகுதி. நுட்பமான தன்னியல்பு அசைவுகளை ஒருங்கிணைப்பதும் நிற்பதைக் கட்டுப்படுத்துவதும் இதன் முக்கிய பணிகள்.

cerebral : மூளைசார்ந்த : மூளை மண்டலம் சார்ந்த.

cerebral hemispheres : மூளைக்கோளங்கள் : மூளையின் இரு பெரும் பிரிவுள்.

cerebralism : மன-மூளைச் செயல் கோட்பாடு : மனத்தின் செயல்கள் எல்லாம் மூளையில்தான் தோன்றுகின்றன என்னும் கோட்பாடு.

மூளைச் செயல் கோட்பாடு