பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Cerebration

273

certifiable


cerebration : மூளை இயக்கம்; பெருமூளையியக்கம்; மூளைத் திறன்; அறிதிறன் : மூளை செயற்படுதல், மனதின் செயற்பாடு; எண்ணம்.

cerebritis : மூளையழற்சி; பெரு மூளையழற்சி.

cerebrosidosis : கொழுப்புத் திசு : கொழுப்பு உயிரணுக்களில் கெராட்டினுடன் கூடிய கொழுப்பு திசு வடிவம்.

cerebrospinal : மூளை-முதுகந்தண்டுத் தொடர்பு : மூளைக்கும் முதுகந்தண்டு வடத்திற்கும் ஒருங்கேயுள்ள தொடர்பு.

cerebro-spinal fever : சன்னி : மூளைப்போர்வை அழற்சி.

cerebro-spinal fluid : மூளைத் தண்டுவட : மூளையைச் சுற்றியும் முதுகரு தண்டிற்குள்ளேயும் உள்ள திரவம்.

cerebrotomy : மூளை அறுவை; மூளை நாளம் சார்ந்த : சீழ்கட்டி யிலிருந்து சீழை வெளியேற்றுவதற்காக மூளைக்கட்டியை பிளத்தல்.

cerebrovascular : மூளைநாளம் சார்ந்த : மூளையின் இரத்த நாளங்கள் தொடர்புடைய, மூளைக்கு இரத்தம் கொண்டு செல்லும் தமனியைத் திடீரென தாக்கும் நோய் எதுவும்.

cerebrum : பெருமூளை : தலையின் முன்பக்கத்திலுள்ள பெருமூளை.

ceroplasty : மெழுகுஉருவமைப்புக் கலை : மெழுகினால் உடல் உட்கூறு உருமாதிரிகளையும் நோயியல் மாதிரிகளையும் உருவாக்குதல்.

certifiable : உறுதிச்சான்றளிக்கத்தக்க : 1. சுகாதார அதிகாரி களுக்கு அறிவிக்கப்பட வேண்டிய தொற்று நோய்கள் தொடர் பானது. 2. ஒரு காப்பாளரின் அல்லது நிறுவனத்தின் கவனிப்பு தேவைப்படுகிற மனக் கோளாறுடைய ஆள்.