பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cestoidea

275

chalk


cestoidea : தட்டைப்புழு வகை சார்ந்த : நாடாப்புழுக்கள் உள்ளடங்கிய தட்டைப்புழு வகையைச் சேர்ந்த ஒரு பிரிவு.

cetavion : செட்டாவ்லோன் : செட்ரிமைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.

cetiprin : செட்டிப்ரின் : எமிப்ரோனியம் புரோமைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.

cetrihex : செட்ரிஹெக்ஸ் : செட்ரிமைடு என்ற கலவை மருந்தின் வணிகப் பெயர்.

cetrimide : செட்ரிமைடு : நுரைக்கும் இயல்புள்ள ஒரு வகை நோய் நுண்மத்தடை மருந்து. காயங்கள், தீச்சுட்ட புண்கள், தோலில் கிருமி நீக்கம் செய்தல் ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது.

chadwick's sign : சாட்விக் குறியீடு : கருவுற்ற நான்காவது வாரத்தில் காணப்படும் அதிகரித்த நாளப்பெருக்கத்தினால் கருவகத்திலும் யோனிக் குழாயிலும் உண்டாகும் கருநீலஊதா நிற மாற்றம். அமெரிக்கப் பண் நோயியல் மருத்துவ வல்லுநர் ஜேம்ஸ் சாட்விக் பெயரால் அழைக்கப்படுகிறது.

chafe : உரசல் காயம் : தேய்த்தல் அல்லது உராய்வு காரணமாக ஏற்படும் காயம்.

chafing : உரசுதல் : துணியால் அல்லது நெருக்கத்திலுள்ள தோலினால் ஏற்படும் உரசல் காரணம் தோலில் உண்டாகும் புறத்தோல்தடிப்பு நோய் (செந்தடிப்பு) மற்றும் தோல் மெலிவு நோய்.

chagas : சாகாஸ் நோய்/இதய வீக்கம் : டிரைப்பானோசோமா குரூசி (Trypanosoma cruzi) எனப்படும் ஒட்டுண்ணி நுண் உயிரியினால் பரப்பப்படும் ஒரு வெப்பமண்டல நோய். இந்த நோய் கண்டவர்களுக்கு அதிகக் காய்ச்சல் உண்டாகும்; இதயத் தசைகள், மண்ணிரல், ஈரல் முதலியவற்றில் வீக்கம் உண் டாகும். கார்லோஸ் சாகாஸ் (carlos chagas-1879-1934) என்ற பிரேசிலிய மருத்துவ மேதையின் பெயரால் இந்நோய் அழைக்கப்படுகிறது.

chalazion : கண் சுரப்பிக் கட்டி; இமைப்புருடு : கண்ணிலுள்ள மெய்போமியன் என்ற சுரப்பிகளில் ஏற்படும் கட்டி.

chalk : சீமைச்சுண்ணாம்பு : உள்ளுரில் கிடைக்கும் கால்சியம் கார்போனேட், உணவுப்பாதைப் புண்ணுக்குப் புளிப்பகற்றும் மருந்துகளிலும், வயிற்றுப் போக்குக்குச் செறிவிப்பு மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.