பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cheilitis

278

chemocautery


cheilitis : உதடு வீக்கம்; உதட்டழற்சி : உதடுகள் வீங்கி இருக்கும் நிலை.

cheiloplasty : உதட்டு அறுவை மருத்துவம் : உதட்டின் மீது செய்யப்படும் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம்.

cheilosis : வாய் வெடிப்பு; கடை வாய்ப் புண்; கடைவாய் வெடிப்பு : வாயின் கோணங்கள் மெலிந்து நலிவுறுதல். பின்னர் வெடிப்புகள் ஏற்படலாம். ரிபோஃபிளேவின் குறைபாட்டினால் இது உண்டாகலாம்.

cheiro pompholyx : கைக்கொப்புளம் : கைகளின் தோலில் முக்கியமாக விரலில் ஒரே மாதிரியாகக் கொப்புளங்கள் தோன்றுதல். இதனால் நுண்ணிய குமிழ்கள் உண்டாகி, அவற்றில் எரிச்சலும் ஏற்படும். பாதங்களிலும் இது போன்ற கொப்புளங்கள் உண்டாகும்.

chelate : அயம்நீக்கப்பொருள் : ஒரு நச்சுப் பொருளைச் செயல் இழக்கச்செய்யும் ஒரு கூட்டப் பொருள். இது அயம் நீக்கப் பொருள்.

chelating agent : அயம் நீக்க வினையூக்கி : ஈயம், உள்ளியம் என்ற சவ்வீரம் (ஆர்செனிக்), பாதரசம் போன்ற உலோகங்களினால் ஏற்படும் நஞ்சூட்டத்தைக் குணப்படுத்துவதற்குப் பயன் படுத்தப்படும் ஒரு வேதியியல் பொருள்.

chelation : குறட்டித்தல் : சில உலோக அயனிகளை தங்கள் மூலக்கூற்றுக் கட்டமைப்பினுள் நிலைப்படுத்துகின்ற கரையக் கூடிய கரிமப்பொருள்கள். நக்கணவு நேர்வுகளில் இதனைக் கொடுக்கும்போது அவ்வாறு உருவாகும் புதிய கூட்டுப் பொருள், சிறுநீர் வழியாக வெளிவருகிறது.

chemabrasion : சிராய்ப்பு நீக்கி : தோலின் மேலுள்ள படலங்களை அழிப்பதற்கு ஒரு வேதியியல் பொருளைப் பயன் படுத்துதல்.

chemical : வேதியியல் பொருள் : 1. வேதியியல் தனிமங்கள் அடங்கிய ஒரு பொருள். 2. வேதியியல் சார்ந்த.

chemistry : வேதியியல் : தனிமங்களின் பல்வேறு கூட்டுப் பொருள்களையும் அவற்றின் கட்டமைப்பையும் ஆராய்ந்தறியும் அறிவியல்.

chemoattractant : வேதியல் கவர்பொருள் : ஒர் உயிரியை அல்லது உயிரணுவைத் தன்னை நோக்கிவரும்படி செய்கிற ஒரு வினையூக்கி.

chemocautery : கடுங்காரத்தீர்ப்பு : புண் நச்சறுப்பதற்கு