பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

chemodectoma

279

chemoresistance


ஒரு கடுங்காரப்பொருளைப் பயன்படுத்தி சூட்டுக்கோலினால் புண்ணைச் சுடுதல்.

chemodectoma : கழலை : வேதியியல் ஏற்பியின் கடுமை இல்லாத கட்டி கழுத்துக்குருதி நாளத்துக்கு அருகிலுள்ளகட்டி அல்லது கழுத்து நரம்புத் திரள் கழலை இதற்குச் சான்று.

chemokinesis : வேதியியல் வினையூக்கம் : வேதியியல் தூண்டுதல் காரணமாக ஓர் உயிரியின் அதிகரித்த நடவடிக்கை

chemonucleolysis : எலும்பு உராய்வுத் தடுப்பு ஊசி : சில வகைத் தண்டெலும்புகளில் இடையிலான மெல்லெலும்புத் தகட்டின் உராய்தலுக்கு கைமோபாப்பைன் என்ற மருந்தினை ஊசிமூலம் செலுத்துதல்.

chemonucleolysis : இயக்குநீர் செலுத்துதல் : ஒர் இயக்குநீரை (என்சைம்), அதனைக் கரையும்படி செய்வதற்காக, எலும்பற்ற வட்டினுள் ஊசி மூலம் செலுத்துதல்.

chemopallidectomy : வேதியியல் இழைம அழிப்பு : மூளையின் கோள இணைப்பு இழையின் ஒரு பகுதியை வேதியியல் முறையில் அழித்தல்.

chemoprevention : வேதியியல் தடுப்பு : புற்றுநோய் உண்டாவதைக் குறைப்பதற்கு சீருணவை அல்லது மருந்துகளைப் பயன்படுத்துதல்.

chemoprophylaxis : வேதியியல் முற்காப்பு; நோய் மருத்துவம் : வேதியியல் பொருள்களைக் கொடுத்து நோய் வராமல் (அல்லது நோய் மீண்டும் தாக்காமல்) தடுத்தல்.

chemopsychiatry : மருந்தியல் மன நோய்ச் சிகிச்சை : மருந்து மூலம் மனநோயைக் குணப்படுத்தம் முறை.

chemoradiotherapy : வேதியியல் கதிரியக்கச் சிகிச்சை : நோய்ச் சிகிச்சையில் வேதியியல் மருத்துவம், கதிரியக்க மருத்துவம் ஆகியவற்றைப் பயன்படுத்துதல்.

chemoreceptor : வேதியியல் இணைப்புப் பொருள்; வேதியியல் பொருளேற்பி, வேதியேற்பி : உயிருள்ள உயிரணுவிலுள்ள ஒரு வேதியியல் இணைப்புப் பொருள். இது வேறு சில வேதியியல் பொருள்களுடன் இணையும் நாட்டமும், திறனும் உடையது.

chemoreflex : வேதியியல் துலங்கல் : ஒரு வேதியியல் தூண்டு தலுக்கான தன் விருப்பம் இல்லாத துலங்கல்.

chemoresistance : வேதியில் எதிர்ப்பு : ஒரு மருந்தின் விளைவுக்கு உயிரணுக்களின் நுண்ணுயிரிகளின் எதிர்ப்பு.