பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

chemosensitive

280

chicken-pox


chemosensitive : வேதியியல் உணர்திறன் : வேதியியல் கல வையில் மாறுதல்களை உணரும் திறம்.

chemosensory : வேதியியல் உணர்வி : ஒரு வாசனையைக் கண்டறிவது போன்ற உணர்வுப் புலன் தொடர்புடைய.

chemosis : இமை வீக்கம்; தண்டு நரம்பிணைப்பு அழற்சி : புடைத்த தண்டு நரம்பின் மேல்முனை இணைப்பில் ஏற்படும் இழைம அழற்சி அல்லது வீக்கம்.

chemotaxis : உயிர்ணு இயக்கம்; வேதியீர்ப்பு : வேதியியல் தூண் டுதலுக்கிணங்க குறிப்பிட்ட திசையில் உயிரி முழுமையாகப் பெயர்ந்து செல்லும் இயக்கம்.

chemosterilant : வேதியியல் அழிப்பான் : நுண்ணுயிரிகளை அழிக்கின்ற ஒரு வேதியியல் கூட்டுப்பொருள்.

chemosurgery : வேதியியல் அறுவை மருத்துவம் : வேதியியல் கூட்டுப்பொருள்கள் மூலம் திசுக்களை அழித்தல்; உறுப்பெல்லைக்குள் மட்டும் பரவும் தொடக்கநிலைத் தோல் புற்றுகளை அறுத்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒர் உத்தி.

chemosynthesis : செயற்கைப் பொருளாக்கம் : பிற வேதியியல் வினையூக்கிகளிலிருந்து புதிய வேதியியல் கூட்டுப்பொருளை உருவாக்குதல்.

chemotaxin : வேதியியல் ஈர்ப்புப் பொருள் : குறியிடத்துக்கு இரத்த வெள்ளை உயிரணுக்களை ஈர்க்கும் ஒரு பொருள்.

chemothalamectomy : வேதியியல் நரம்பு அறுவை மருத்துவம் : வேதியியல் முறையில் மூளை நரம்பு முடிச்சின் ஒரு பகுதியை அழித்தல்.

chemotherapy : வேதியியல் பொருள் மருத்துவ முறை : நோய் உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் திறனுள்ள வேதியியல் சேர்மத்தைக் கொண்டு நோய் குணப்படுத்தும் முறை.

chemzymes : வேதியியல் செரிமானப் பொருள்கள் ; உயிர்வேதியியல் வினைகளை ஊக்குவிக்கிற செரிமானப் பொருள்களைப் போன்றே வேதியியல் வினைகளை ஊக்குவிக்கின்ற சிறிய, கரையக்கூடிய, கரிம மூலக்கூறுகளின் ஒரு குழுமம்.

chendol : செண்டோல் : செனோடியாக்சிக்கோலிக் அமிலத்தின் வணிகப் பெயர்.

chenodeoxycholic acid : செனோடியாக்சிகோலிக் அமிலம் : பித்த நீரில் கலந்திருக்கும் ஒரு துப்புரவுப்