பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

chikungunya

281

Chiba needle


பொருள். பித்தப்பையில் விளையும் கல்போன்ற கடும் பொருளைக் கரைப்பதற்கு வாய்வழி இது உட்கொள்ளப்படுகிறது.

cherry angioma : செங்குருதி நாளக் கட்டி : தளர்ந்த குருதி நாளக்கட்டி. இக் கெம்புக்கல் போன்ற செந்நிறக் கொப்புளமாக இருக்கும். இதனை வெளிறிய வளையம் சூழ்ந்து இருக்கும். முதியவர்களின் உடல்நடுப்பகுதியிலும், கை கால்பகுதிகளிலும் உண்டாகும். இதன் நடுப்பகுதியில் விரிவடைந்த மெல்லிய தந்துகிகள் அடங்கியிருக்கும்.

cherry red colour : கெம்புச் செந்நிறம் : கார்பன் மோனாக்சைடு நஞ்சூட்டத்தில் காணப்படும் சளி-சரும நிறமாற்றம்.

cherry red spots : கெம்புச் செமபுள்ளிகள் : B-D-N அசிட்டில் ஹெக்சோ சாம்டேஸ் என்ற செரிமானப்பொருள் குறை.பாட்டினால் GM2 என்ற குறிப்பிட்ட கொழுப்புப்பொருள் மிகுதியாகச் சேர்வதால் உண்டாகும் டேய்-சாக்ஸ் நோய், நியமான்-பிக் என்ற நோய் ஆகியவை பிடித்த நோயாளிகளின் பார்வை விழிமையத்திலுள்ள ஒளிர்வான செந்நிறப் புள்ளிகள்.

chest : நெஞ்சு; மார்பு; மார்புக் கூடு.

chest-trouble : மார்புக் கோளாறு.

cheyne-stokes respiration : சுவாசச் சுழற்சி : சுவாசம் ஏறியும் இறங்கியும் வரும் சுழற்சி. சில சமயம் மூச்சுவிடுதல் மிக வேகமாக நடைபெறும் வேறு சமயம், சுவாசம் மிக மெதுவாக நடைபெறும்.

chiasma : கண் நரம்புக் குறிக்கீடு பிணைப்பு குறுக்குக் கூட்டு : கண் நரம்புகள் 'x' வடிவில் குறுக்காக சந்தித்தல்.

chiba needle : ஷிபா ஊசி : தோலினுடே பித்துப்பை ஊடு கதிர்ப்படத்துக்குப் பயன் படுத்தப்படும் நெகிழ்திறன் உள்ள நீண்ட ஊசி. ஒரு ஜப்பானியப் பல்கலைக் கழகத்தின் பெயரால் அழைக்கப் படுகிறது.