பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Chloroma

286

chlortetracycline


ஆவியாகும், இனிமை கலந்த சுவையுடைய, நிறமற்ற உணர்ச்சியகற்றும் நீர்மம்.

chloroma : குளோரோமா; பசும்புத்து : முகத்திலும், மண்டை ஒட்டிலும், முள்ளெலும்புகளிலும் எலும்புகளை மூடியுள்ள சவ்வின்மீது உண்டாகும் பசு மஞ்சள் நிறமுடைய வளர்ச்சிகள்.

chloromycetin : நச்சுக்காய்ச்சல் : முதுகந்தண்டு நோய், மூளை அதிர்ச்சி ஆகியவற்றில் பயன்படுத்தப் படும் குளோரா ஃபெனிக்கோல் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

chlorophyll : பச்சையம்; பச்சை நிறமிகள் : தாவரங்களில் ஒளிச் சேர்க்கை நடைபெறுவதற்கு உதவுகிற பசியநிறப் பொருள். இப்போது இது செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு, மண மகற்றும் பொருளாகப் பயன் படுத்தப்படுகிறது.

chloroquine : முறைக்காய்ச்சல் மருந்து (குளோரோக்குவின்) : முறைக்காய்ச்சலில் (மலேரியா) பயன்படுத்தப்படும் மருந்து. கொள்ளை நோய் பரவும் பகுதிகளில் உப்புடன் இது கலக்கப்படுகிறது. வீக்கத்தைக் குறைக்கும் தன்மையும் கொண்டது.

chlorosis : பசலை நோய் : இளம் பெண்களிடம் பசுமை நிறம் படரும் சோகை என்ற பசலை தளர்ச்சி நோய்.

chloroxienol : குளோரோக்சைனால் : நோய்கிருமிக் கொல்லியாகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை மருந்து.

chloropromazine : குளோர்புரோமாசின் : மிகுந்த மருந்தியல் வினைபுரியக்கூடிய ஒரு மருந்து. இது தூக்க மருந்தாகவும், வாந்தித் தடுப்பு மருந்தாகவும், வலிப்புநோய் எதிர்ப்பு மருந்தாகவும் குருதியழுத்தம் குறைக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. உளவியல் கோளாறுகளின்போது பயன்படுத்தத்தக்க சிறந்த மருந்து.

chloropropamide : குளோர்புரோப்மைட் : நீரிழிவு நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்து. டயா பினிஸ், மெலிட்டாஸ் போன்றவை இவ்வகையைக் சேர்ந்தவை.

chlorprothixene : குளோரோபுரோத்திக்சின் : ஒருவகை நோவகற்றும் மருந்து. முரண் மூளை நோய்களின்போது பயன்படுத் தப்படுகிறது. ஆனால் நீண்ட காலம் சிகிச்சையளிக்கும்போது இது அவ்வளவாகச் செயற்படு வதில்லை.

chlortetracycline : குளோர்டெட்ராசைக்ளின் : டெட்ராசைக்ளின் மருந்தின் ஒருவகை.