பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

chlorthalidone

287

cholecalciferol


chlorthalidone : குளோத்தாலிடோன் : சிறுநீர் கழிவதைத் தூண்டு வதற்கு வாய்வழி கொடுக்கப்படும் மருந்து. இது ஒரு நாள் விட்டு ஒருநாள் கொடுக்கப்படுகிறது. இது 48 மணிநேரம் செயற்படக் கூடியது.

chlorthiazide : குளோர்தையாசைடு : சிறுநீரகக்குழாய் மறு ஈர்ப்பைத் தடைசெய்யும் முதலாவது தையாசிட் என்ற சிறுநீர்ப் பெருக்கி.

chlorpheniramine : குளோடாஃபெனிராமின் : ஹிஸ்டாமின் எதிர்ப்புப் பொருள் தயாரிப்பிலிருந்து பெறப்படும் ஒரு பைரிடின்.

chloruresis : குளோர்யூரசிஸ் : சிறுநீரில் குளோரைடுகள் சுரத்தல்.

chloruria : குளோர்யூரியா : சிறு நீரில் மிகுதியான குளோரைடுகள் இருத்தல்.

chocolate cyst : சாக்கலேட் நீர்க்கட்டி; சாக்கலேட் பந்து : கருப்பையின் உட்புறச் சவ்வில் ஏற்படும் நீர்க்கட்டி. இது நிலை மாறிய இரத்தத்தைக் கொண்டிருக்கும். இது பெரும்பாலும் பெண் கருப்பையில் உண்டாகிறது.

choke : மூச்சுத்தடை; திணறல்; மூச்சமைப்புத் திணறல்.

cholaemia : பித்தசோகை : குருதியில் பித்தநீர் தேங்குவதால் உண்டாகும் நோய்.

cholagogic : பித்தபேதி; பேதியையுண்டாக்கும்.

cholagogue : பித்தபேதி மாருந்து; பித்தநீர் ஓட்ட ஊக்கி : குடலுக்குள் பித்தநீர் பாய்வதை அதிகரிக்கும் மருந்து.

cholangiocarcinoma : பித்தநீர்ச் சுரப்பிப் புற்று : உள்கல்லீரலில் பித்தநீர் நாளங்களின் மேல்திசுவிலிருந்து எழும் சுரப்பிப் புற்றுநோய்.

cholangiography : பித்தநீர் நாள ஊடுகதிர்ப்படம்; பித்தக்குழாய் வரைவி : கல்லீரல், பித்தநீர் நாளங்களைப் பரிசோதனை செய்த ஊடுகதிர் (எக்ஸ்ரே) படம். ஊடுகதிர் ஊடுருவாத பொருளினை வாய்வழியே கொடுத்தும், நேரடியாக ஊசி மூலம் செலுத்தியும் இந்தப் படம் எடுக்கப்படுகிறது.

cholangiole : பித்தநீர்நாளக் கிளை: பித்தநீர் நாள மண்டலத்தின் முனைக்கிளைகளில் ஒன்று.

cholangiohepatitis : பித்தநீர்நாள வீக்கம் : நுரையீரல், பித்த நீர் நாளங்களில் ஏற்படும் வீக்கம்.

cholecalciferol : பித்தநீர் கால்சிஃபெரால் : D-2 என்ற வைட்டமின்.