பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cholecyst

288

cholecystostomy


சீருணவிலிருந்து பெறப்படும் அல்லது 7-டிஹைடிரோ கொலஸ்டிராலை ஒளிர்வூட்டுதல்முலம் தோலில் செயற்கையாக உண்டாக்கும் பொருள்.

cholecyst : பித்தப்பை.

cholecystagogue : பித்தப்பை துப்புரவுப் பொருள் : பித்தநீர்ப் பையைக் காலி செய்வதற்குப் பயன்படும் ஒரு வினையூக்கி.

cholecystalgia : பித்தப்பை விரிவாக்கம் : பித்தநீர்ப்பை விரி வடைதல்.

cholecystectomy : பித்தப்பை அறுவை மருத்துவம்; பித்தப்பை நீக்கம் : பித்தநீர்ப்பையினையும், சிறு குடலினையும் அறுவை செய்து அப்புறப்படுத்துதல்.

cholecystitis : பித்தப்பை அழற்சி : பித்தநீர்ப்பையில் உண்டாகும் வீக்கம்.

cholecystoduodenostomy : பித்தப்பை-முன்சிறுகுடல் பிணைப்பு: பித்தநீர்ப்பைக்கும், முன் சிறு குடலுக்கும் இடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்துதல். பொதுப்பித்தப்பை நாளத்தில் அழற்சி அல்லது அறுவைச் சிகிச்சை காரணமாக நெரிசல் கோளாறு ஏற்படும்போது இந்தப் பிணைப்பு ஏற்படுத்தப் படுகிறது.

cholecystography : பித்தப்பை ஊடு கதிர்ப்படம்; பித்தப்பை வரைவி : ஊடுகதிர் ஊடுருவாத பொருளை கொடுத்த பின்பு பித்த நீர்ப்பையினை ஊடு கதிர்ப்படம் மூலம் பரிசோதனை செய்தல்.

cholecystojejunostomy : பித்தப்பை-இடைச் சிறுகுடல் பிணைப்பு : பித்தநீர்ப்பைக்கும் இடைச்சிறு குடலுக்கும் (நடுச்சிறுகுடல்) இடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்துதல். கணையத்தின் தலைப்பகுதியில் ஏற்படும் வளர்ச்சி காரணமாக உண்டாகும் மஞ்சட் காமாலை அடைப்பின்போது இது ஏற்படுத்தப்படுகிறது.

cholecystokinin : கோலசிஸ் டோக்கினின் : பித்தநீர்ப்பையை சுருங்கச் செய்கிற ஒர் இயக்கு நீர் (ஹார்மோன்). மேற்குடல் சவ்வில் இது சுரக்கிறது.

cholecystolithiasis : பித்தப்பைக்கல் : பித்தநீர்ப்பையில் கல் போன்ற பொருள் உண்டாதல்.

cholecystostomy : பித்தநீர் வடிகுழல் அறுவை மருத்துவம் : பித்த நீர்ப்பைக்கும் அடிவயிற்றுப் பரப்புக்குமிடையில் அறுவைச் சிகிச்சை மூலம் ஏற்படுத்தப்படும் குழல் உறுப்பு. பித்தநீர்ப் பையிவிருந்து கற்களை அகற்றிய பிறகு வடிகுழல் அமைப்பதற்காக இது ஏற்படுத்தப்படுகிறது.