பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

choleragen

290

cholestery


வாந்தியும் உண்டாகும். கைகால் நோவும் ஏற்படும். உடனடியாகச் சிகிச்சை செய்யாவிட்டால் மரணம் உண்டாகும். மாசுபட்ட நீர், அளவுக்கு அதிகமான மக்கள் நெரிசல், சுகாதாரமற்ற சூழ்நிலை காரணமாக நோய்க்கிருமி பரவி பெருமளவு உயிர்ப்பலி ஏற்படு கிறது.

choleragen : காலரா நஞ்சு : காலராக்கிருமிகள் மூலம் உண்டாகும் அயல் நஞ்சு.

choleraic : வாந்திபேதிக்குரிய கொள்ளை நோய் சார்ந்த.

choleric : பித்தம் நிரம்பிய.

choleretic : பித்தநீர் ஊக்கி : 1. நுரை யீரல் பித்த நீரை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் பொருள். 2) பித்தநீர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வினையூக்கி.

choleric temperament : சிடுசிடுப்பு; முன்கோபக் குணம் : எளிதில் சீற்றம் கொள்ளுகிற சிடுசிடுப்பான நடத்தைப் போக்கு. இது, நான்குவகை நடத்தைப் போக்குகளில் ஒன்று.

cholerine : வேனிற்கால வாந்தி பேதி : வேனிற்காலத்தில் உண் டாகும் வாந்திபேதிநோய்.

cholestasis : பித்தநீர் அடைப்பு; பித்த நீரோட்டத் தடை; பித்தத் தேக்கம் : பித்தநீர் பாய்வது குறைதல் அல்லது அடைக்கப்படுதல். உள் கல்லீரல் பித்தநீர் அடைப்பு என்பது, தடுப்பு வகையைச் சேர்ந்த மஞ்சள் காமாலையினால் உண்டாகிறது.

cholesteatoma : காது கழலை : கொலாஸ்டிரால் அடங்கிய, பையில் அடைபட்டுள்ள, கடுமையாக இராத கழலை. இது பெரும்பாலும் நடுக்காதில் ஏற்படுகிறது.

cholesterol : கொழுப்பினி; கொழுவியம்; கொலஸ்டிரால் : கொழுப்புத்தன்மை வாய்ந்த படிகம் போன்ற பொருள். மூளை நரம்புகள் நுரையீரல், இரத்தம், பித்தநீர் ஆகியவற்றில் இது காணப்படுகிறது. அது எளிதில் கரைவதில்லை. இது பித்த நீர்ப்பையில் தமனிச் கவர்களிலும் உறைந்துவிடும். ஒளிபடும் போது, இது 'வைட்டமின்-D' என்ற ஊட்டச் சத்து ஆகிறது.

cholesteroluria : குருதிக்கொழுப்பு : சிறுநீரில் கொழுப்பு (கொலஸ்டிரால்) இருத்தல்.

choplesterosis : கொலஸ்டிரால் மிகைப்படிவு : கொலஸ்டிரால் அளவுக்கு அதிகமாகப் படிதல்.

cholestery 1 : கொழுப்பு மூல அணு : ஹைடிராக்சில் குழுமத்தை அகற்றுவதன் மூலம் உண்டாகும் கொழுப்பு மூல அணு.