பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

chondrus

293

choriogenesis


chondrus : எலும்புக் குருத்து.

chordata : தண்டெலும்பு விலங்குகள் : தங்கள் வளர்ச்சிநிலையின் போது ஒரு தண்டெலும்பு அல்லது அதன் கரு மூலத் தடங்களுடைய உயிரினப் பெரும் பிரிவு சார்ந்த விலங்குகள்.

chorde : ஆண்குறி விறைப்பு : ஆண்குறி கடும் நோவுடன் விறைத்திருத்தல். இதனால் மூத்திரக்குழாய் அழற்சியும் ஏற்படுகிறது.

chordic : காக்காய் வலிப்புடைய.

chorditis : விந்து இழை வீக்கம்; விந்துக்குழல் அழற்சி : விந்து இழை வீக்கம்.

chordoma : தண்டெலும்புக் கட்டி : தண்டெலும்பிலுள்ள முதிரா எச்சங்களிலிருந்து உண்டாகும் உக்கிரமான கட்டி. இது, இடுப்படி முக்கோண முட்டெலும்பு சார்ந்த புனித குத எலும்புப் பகுதியிலுள்ள பத்து எலும்புத்தொகுதியில் ஐந்தாவது, ஆறாவது எலும்புகளில் பெரும்பாலும் உண்டாகிறது.

chordotomy (cordotomy) : தண்டுவடப்பிளவுறுத்தம் : தண்டு வடத்தில் (முதுகுத்தண்டு) ஏற்படும் குடுமையான இடை விடாத வலியைப் போக்குவதற் காகத் தண்டு வடத்திலுள்ள நரம்பு இழைமங்களின் கற்றையை அறுவைச் சிகிச்சை மூலம் பிளவுறுத்தல்.

chorea : சுயக் கட்டுப்பாடிலா வலிப்பு : இது வலிப்பு வகையில் ஒன்று. நோயாளியின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு ஏற்படும் நோய். இதனை நடனவலிப்பு என்றும் கூறுவர்.

choreoathetosis : வாதவலிப்பு : நடனவலிப்பு எனப்படும் சுயக் கட்டுப்பாடில்லாத வலிப்புகளிலும், மூளையில் நைவுப் புண் ஏற்படுவதன் காரணமாக கைகளும் பாதங்களும் காரணமின்றி நடுங்குகிற உறுப்பு நடுக்கம் எனப்படும் சுழல் வாதத்திலும் புலப்படும் ஒரு கோளாறு.

chorioallantosis : கருப்பைப் புறச்சவ்வு : பாலூட்டிகளில் கருக்கொடியின் கருவுயிர்ப் பகுதியாக அமைகிற கருப்பைப் புறத்தோலும், உயிரகப்பையும் இணைவதால் உண்டாகும் முதிரா நிலைப் புறச்சவ்வுப் படலம்.

choriocarcinoma : கருப்பை கட்டி : கருக்கொடியிலிருந்து கருப்பையினுள்ள மிக அரிதாக வளரும் உக்கிரமான கட்டி.

choriogenesis : கருப்பைப்புறத் தோல்வளர்ச்சி : கருப்பையில் புறத்தோல் வளருதல்.