பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

choroiditis

295

chromatid bodies


choroiditis : கண்விழி பின்படலஅழற்சி; கருவிழி பின்படல அழற்சி : விழித்திரைப்படலத்தைப் பாதிக்கும் ஒரு சிதைவு மாற்றம்.

choroidocyclitis : கண் வீக்கம் : கண் கரும படலத்திலும், கண் ணிமை இழை உறுப்பிலும் ஏற்படும்.

christmas disease : கிறிஸ்துமஸ் நோய் : குருதிக்கட்டு எனப்படும் மிக அரிதாக உண்டாகும் ஒரு நோய். இது சிறு காயத்திலிருந்து குருதிப் பெருக்கிடும் பரம்பரை நோயாகும். இதனை குருதிக் கட்டு-B நோய் (haemo philia-B disease) என்றும் அழைக்கப்படுகிறது. இது குழந்தைகளிடம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால் இதனைக் 'குழந்தை நோய்' என்றும் கூறுவர். "Factor IX" எனப்படும் புரதம் இல்லாமையினால் இரத்தம் உறைவது நின்றுபோவதால் இந்நோய் உண்டாகிறது.

christian's triad : கிறிஸ்டியன் மும்மை நோய்க்குறிகள் : திசு உயிரணு அழிவில் காணப்படும் மூன்று நோய்க்குறிகள். இதில் உயிரணுச்சிதைவு எலும்பு நைவுப்புண், இயல்புக்கு மீறிய கண்விழிப்பிதுக்கம், இனிப்பு இல்லா நீரிழிவு மூன்று நோய் குறிகள் உண்டாகின்றன. ஹென்றி கிறிஸ்டியன் என்ற அமெரிக்க மருத்து அறிஞரின் பெயரால் இது அழைக்கப் படுகிறது.

christian syndrome : கிறிஸ்டியன் நோய் : அளவுக்கு மீறி அபினி உட்கொள்வதால் உண்டாகும் தன் இனக்கீற்று நோய். இதனால், கட்டைவிரல்களும் முனைகோடி விரல் எலும்புகளும் குட்டையாகி விடுகின்றன.

christian-weber disease : கிறிஸ்டியன்-வெபர் நோய் : சீழ்க் கட்டியில்லாத திசுப்படல அழற்சி நோய் மறுக்களித்தல். இதனால், தோல் சிவப்பாதல், அழற்சி புண்ணாதல், தோல் சுருக்கம் ஆகியவை தோன்றி தோலடியில் கடுமையான வலி உண்டாகும்.

chromaffin : குரோமிய நிற மாறுபாடு : அண்ணிரகச் சுரப்பிகளின் சில உயிரணுக்களைப் போன்று, குரோமியம் உப்புகளினால் வலுவாக நிறம் வேறுபடுதல்.

chromaffinoma : குரோமியக்கட்டி : குரோமிய நிற உயிரணுக்களில் அடங்கியுள்ள கட்டி.

chromatic : நிறம் சார்ந்த : 1. நிறம் தொடர்புடைய. 2. குரோ மாட்டின் தொடர்புடைய.

chromatid bodies : கருந்திரள் கட்டி : கருநிறமுடைய நீள் வட்டமான திரட்சி. இது அமீபாக்கட்டிகளில் 1-4 எண் னிக்கையில் காணப்படும்.