பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

chromoblast

297

chromosome


chromoblast : கருமுளை உயிரணு : ஒரு நிறமி உயிரணுவாக வளர்கிற ஒரு கருமுளை உயிரணு.

chromocystoscopy : வண்ணச் சாயமுறை; சிறுநீர்ப்பை அறுவைச் சிகிச்சை : ஒரு சாயப்பொருளை வாய்வழியாகச் செலுத்தி மூத்திரக்கசிவு நாளத்துளையில் உள் அறுவைசெய்து சிறுநீர்ப்பையை அகற்றுதல்.

chromogenesis : வண்ண உற்பத்தி : வண்ணம் அல்லது நிறமி உற்பத்தியாதல்.

chromomere : குரோமாட்டின் குருணை : கருமுளை அணு இயக்கமாற்றத்தின் தொடக்க நிலைகளில் ஒரு நிறப்புரியின் மீது தோன்றும் செறிவான குரோமாட்டின் குருணைப் பண்புகளில் ஒன்று.

chromonema : நிறப்புரி மைய இழை : ஒரு நிறப்புரியின் நீள வாக்குப் பகுப்பின் காரணமாக அமைந்துள்ள இரண்டு இழைகள் போன்ற அமைப்பின் மைய இழை. இது குரோமாட்டின் குருணைகள் நெடுகே அமைந்திருக்கும்.

chromophil : வண்ண ஏற்பி; கறைபடும் உயிரணு : மிக எளிதாகக் கறைபடக்கூடிய உயிரணு அல்லது திசு. சில நுண்ணாய்வு உந்திகளில் இந்தக் கறை மிக அதிகமாகப்படும்.

chromophobe : கறைபடா உயிரணு : மிக எளிதாகக் கறைபடாத உயிரணு அல்லது திசு.

chromophobia : கறைபடா தன்மை : சாயங்களினால் மிக குறைவாகக் கறைபடும் தன்மை.

chromophore : வண்ண உயிரணு : தாவரங்களிலும் சிலவகை ஒற்றையணு உயிரிகளிலும் காணப்படும் உயிருள்ள ஒரு வண்ண உயிரணு,

chromoscopy : சிறுநீரக நோய் ஆய்வு : சாயப்பொருள்களை வாய்வழியாக உட்செலுத்தி சிறுநீரின் நிறத்தைக் கொண்டு சிறுநீரகக் கோளாறுகளைக் கண்டறிதல்.

chromosomal RNA : நிறப்புரி ஆர்.என்.ஏ : ரியோநூக்ளிக் அமிலத்தின் மீச்சேர்மக்கூறுகள். இவை, டிஎன்ஏ இருபடியாக்கம் செய்யப்பட்ட பின்பு, பின்கோடி சரத்தில் டி.என்.ஏ.இன் கவடு வளர்வதற்கு ஆதாரமாக இருக்கின்றன.

chromosome : இனக்கீற்று; பண்புக்காரணித்தொகுப்பு; அணு குருமி; நிறமி; நிறக்கோல் : உயிர்மப் பிளவுப் பருவத்தில் உயிரியலான பங்கு கொண்ட இனமரபுப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் இனக்கூறின் கம்பியிழை