பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

chronobiology

298

chubby puffer syn...


போன்ற பகுதி. இது இரட்டித்துப் பெருகும் தன்மை யுடையதாகும்.

chronobiology : காலவரிசை உயிரியல் : உயிரியல் நிகழ்வு களை-குறிப்பாகத் திரும்பத்திரும்ப நடைபெறும் அல்லது சுழல் முறையில் நடைபெறும் நிகழ்வுகளை-காலவரிசையில் அறிவியல் முறையில் ஆராய்தல்,

chronic : நாட்பட்ட நோயாளி.

chronograph : காலவரிசைப் பதிவுக் கருவி : காலத்தின் சிறு சிறு இடைவெளிகளைப் பதிவு செய்யக்கூடிய ஒரு கருவி.

chronological age : காலவரிசை வயது; காலக்கிரம வயது : ஒரு மனிதரின் உண்மையான வயது (ஆண்டுகளில்).

chronotropism : காலமுறை மாற்றம் : இதயத் துடிப்பு கால முறைப்படியான அசைவுகளின் வேகவிதத்தைத் திருத்தியமைத்தல்.

chrysoderma : நிறமாற்ற நோய் : தோலிலும், கண்ணிலும் இணைப்புத் திசுக்களில் தங்க உப்புகள் படிவு செய்வதன் காரணமாக தோலும், விழி வெண்படலத்திலும் கரும் பழுப்பு நிறத்தில் ஏற்படும் நிற மாற்றம்.

chrysotile : கிரிசோட்டைல் : சுருள் சுருளான நீண்ட இழை மங்களுடன் கூடிய பாம்பு வடிவிலான வெள்ளைக் கல்நார்.

chubby puffer syndrome : கொழுக்மொழுக் நோய் : ஒரு மத்திய உறக்க மூச்சு நிறுத்தம். உடல்பருமனாகவும், மென்மையாகவும் உள்ள ஆண்களை