பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

chyostek's sign

299

chymotrypsin


இது பாதிக்கிறது. அடிப்படை உயிர்ப்புக் குறைபாடு காரணமாக இது உண்டாகிறது.

chyostek's sign : முகச்சுரிப்பு : முக நரம்பில் துளையிடுவதால் முகம் அளவுக்குமீறிச் சுரித்துப் போதல். இது, முறை நரம்பிசிவு நோயின் அறிகுறி.

chyle : உணவுப்பால்; குடல்கூழ்; குடற்பால்; குடற்சாறு : உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்பு கலந்த வெள்ளை குடல் நிணநீர்.

chyliferous : உணவுப்பால் சார்ந்த : 1. உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்பு கலந்த வெள்ளி நிணநீர் என்ற உணவுப்பால் உற்பத்தி யாதல். 2. உணவுப்பால் கொண்டு செல்லப்படுதல்.

chylomicron : கொழுப்புப்புரதம் : உணவு உண்டபிறகு திசுக்களுக்குப் புறவளர்ச்சிக் கொழுப்பின் (கொலஸ்டிரால்) முக்கிளி சரைகள், பல்வேறு அப்போலிப் புரதங்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்லும் ஒருவகைக் கொழுப்புப் புரதங்கள்.

chylomicronaemia : சைலோமைக்ரோன் மிகுநோய் : இரத்தத்தில் சைலோமைக்ரோன்கள் மிகுதியாக இருத்தல். இதில் முக்கிளிசரைடு அளவும் அதிகமாக இருக்கும்.

chylothorax : உணவுப்பால் கசிவு : மார்பியல் குடல் கூழ் நுரையீரல் உட்குழிவிற்குள் மார்பக நிணநீர் குழலிலிருந்த உணவுப்பால் கசிதல்.

chyluria : சிறுநீரில் உணவுப்பால்; குடற்பால் நீரிழிவு; கொழுநீர் : சிறுநீரில் உணவுப்பாற்கூறு காணும் உடற்கோளாறு.

chymar : கைமார் : கைமோட்ரிப்சின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

chyme : உணவுச் சாறு : இறைப்பைக் குழம்பு குடலில் உண்டாகும் உணவின் குழம்பு. இது கனமான மஞ்சள் நிற அமிலம். இது இரைப்பையி லிருந்து, முன்சிறு குடலுக்குச் செல்கிறது. இதன் அமிலத் தன்மை, உணவுச்சாறு அடிக்கடி இடைவெளிகளில் வெளியேறும் வகையில் இரைப்பையின் வாயில்காப்பைக் கட்டுப் படுத்துகிறது.

chymification : உணவு குழம்புருவாதல் : உணவு குழம்பாக மாறும் மாறுபாடு.

chymoral : கைமோரால் : டிரிப்சின், கைமோட்ரிப்சின் போன்ற செரிமானப் பொருள் கலவையின் (என்சைம்கள்) வணிகப் பெயர்.

chymotrypsin : கைமோட்ரிப்சின் : புரதத்தைச் சீரணிக்கக்