பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cymotrypsinogen

300

cimetidine


கூடிய ஒரு செரிமானப் பொருள் (என்சைம்). இது கணையத்தில் சுரக்கிறது.

chymotrypsinogen : கைமோடிரிப்சினோஜன் : கணையத்தில் உற்பத்தியாகும் கைமோடிரிப்சின் என்ற செரிமானப் பொருளின் முன்னோடி. டிரிப்சின் என்ற செரிமானப் பொருளின் வினையின் மூலம் கைமோடி ரிப்சினாக மாற்றப்படுகிறது.

cicatrin : சிக்காட்ரின் : நியோமைசின், பாசிட்ராசின் அடங்கிய ஒரு தயாரிப்பின் வணிகப் பெயர். இது அமினோ அமிலமாகக் கிடைக்கிறது. இது காயங்களைக் குணப்படுத்துகிறது.

cidex : சைடெக்ஸ் : நுட்பமான அறுவைச் சிகிச்சைக் கருவிகளிலும் ஆடிகளிலும் பயன் படுத்தப்படும் பாக்டீரியாக் கொல்லி மருந்தின் வணிகப் பெயர்.

cidomycin : சைடோமைசின் : ஜெண்டாமைசின் சல்ஃபேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

cigarette paper skin : சிகரட்தாள் தோல் : தவறான ஒருங் கிணைப்பு, I, III வகை எலும்புப் புரதச் செய்முறை காரணமாக பளபளப்பான மிக மெருதுவான மேற்பரப்புடன் தோலைக்குறிப்பாக நுண்ணுயிராக்கம் செய்தல். இது, எஹ்லர்ஸ்டான்லெஸ் நோய் வகையில் காணப்படுகிறது.

cilia : கண்ணிமை மயிர் : கண்ணிமைகளில் காணப்படும் இழை போன்ற உறுப்பு.

ciliary : இழைம உறுப்பு சார்ந்த : 1. கண்ணிமை மயிர் அல்லது மயிர்போன்ற உறுப்பு கொண்டு உள்ள. 2. இழைமயிர் அல்லது தசை போன்ற கண் உறுப்புகள் தொடர்புடைய.

ciliata : இழை உறுப்பு உயிர் : ஒற்றை அணு உயிரியின் ஒர் உட்பிரிவு. இது இடம் பெயர்வதற்குக் கால்போல் பயன்படும் இழை உறுப்பினைக் கொண்டிருக்கும். .

ciliectomy : இழையுறுப்பு அறுவை மருத்துவம் : 1. இழையுறுப்பின் பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல். 2. கண்ணிமையின் மயிர் வரிசை அடங்கிய கண்ணிமையின் ஒரு பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.

cimetidine : சிமெட்டிடின் : இரைப்பை அமிலம் சுரப்பதை தடுக்கக்கூடிய H2 ஏற்பிகளுக்கு எதிரானது. சீரணப்பாதைப் புண்ணைக் குணப்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது.