பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Cimex

301

cingulum


Cimex : சிமெக்ஸ் : மூட்டுப் பூச்சி வகையைச் சேர்ந்த இரத்தம் உறிஞ்சும் பூச்சிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை.

cinchocaine : சிங்கோக்கைன் : ஆற்றல் வாய்ந்த உறுப்பெல்லை உணர்வு நீக்கி. இது தோல் மேற்பரப்பு உணர்வு நீக்கியாகவும் (1%-2%), ஊடுருவு உணர்வு நீக்கியாகவும் (0.05%-0.2%), முதுகந்தண்ட உணர்வு நீக்கியாகவும் பயன்படுகிறது. இது களிம்பு வடிவிலும் கிடைக்கிறது.

cinchona : சிங்கோனா : இது ஒரு தென் அமெரிக்க மரம். இதன் பட்டையிலிருந்து காய்ச்சல் மருந்துப்பொடி தயாரிக்கப்படுகிறது. சிங்கோனைன், சிங்கோனிடின், கொயினா, கொயினிடின் ஆகிய மருந்துப் பொருள்களும் இதன் வேர், தண்டுப் பட்டையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

cinchonism : சிங்கோனிசம் : சிங்கோனா மரப்பட்டையிலுள்ள காரச்சத்தின் ஆற்றல் அளவு கடந்து செயற்படுவதால் ஏற்படும் கோளாறு. இதனால், தோல் சிவப்பாதல், காதிரைச்சல், பார்வை மங்குதல், தலைச் சுற்றல், குமட்டல், வாந்தி, பேதி உண்டாகின்றன. காரச்சத்து மிக அதிகமாக இருக்குமானால், தோல்படை, உறக்க மயக்கம், கண்குருடு, ஆழ்ந்த மன இறுக்கம் ஏற்படும்.

cincophen : சிங்கோஃபென் : கீல்வாதம், வாதக்காய்ச்சல் ஆகியவற்றுக்குப் பயன்படும் நோவகற்றும் மருந்து.

cineangiocardiography : ஊடகச் சலனப்படம் : இதய அறைகள், இரத்த நாளங்கள் வழியாக ஒரு மாறுபடு ஊடகம் செல்லும் பாதையைக் காட்டும் சலனப்படங்கள்.

cincangiography : இதய ஒளிப் படப் பதிவு : இதயம், இரத்த நாளங்கள் ஆகியவற்றின் உருக்காட்சிகளைத் திரைப்பட உத்தி மூலம் ஒளிப்படமாகப் பதிவு செய்தல்.

cingulectomy : வளைய அறுவைச் சிகிச்சை : முன்புற மூளை மடிப்புச் சுருளை மின் பகுப்பு முறையில் அழித்தல்.

cingulum : அரைக்கச்சை வளையம் : 1. சுற்றி வளைந்துள்ள அமைப்பு அல்லது வளையம். 2. மூளை மடிப்புச் சுருளில் நீளவாக்கில் செல்லும் ஒரு இழைக்கற்றை.