பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Citanest

304

classification


Citanest : சிட்டானெஸ்ட்: பிரிலோக்கைன் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

citric acid : சிட்ரிக் அமிலம் : எலுமிச்சைப் பழங்களிலுள்ள அமிலம். வயிற்று உப்புசத்தை குணப்படுத்த பொட்டாசியம் சிட்ரேட்டாகக் கொடுக்கப் படுகிறது.

citrin : சிட்ரின் (வைட்டமின்-P) : இழைமக் குருதி நாளங்களின் முறிவெளிமைப் பண்பை இயக்குவதாகக் கருதப்பட்ட நீரில் எளிதாகக் கரையும் பண்புடைய எலுமிச்சைப்பழ ஊட்டச்சத்து. இது வைட்டமின்-C என்ற ஊட்டச்சத்தின் வினையை அதிகரிக்கிறது. எலுமிச்சை இனத்தைச் சேர்ந்த பழங்கள், கரு முந்திரிப்பழம் போன்றவற்றில் இது உள்ளது.

citrullinaemia : குருதியில் மிகை சிட்ருலின் : இரத்தத்தில் சிட்ருலின் என்ற அமினோ அமிலம் மிகுதியாக இருத்தல்.

citrullinuria : சிறுநீரில் மிகைச் சிட்ருலின் :சிறுநீரில் சிட்ருலின் என்ற அமினோ-அமிலத்தின் அளவு அதிகமாக இருத்தல்.

clairaudience : சேணோசை : புலன் கடந்தவற்றைக் கேட்கும் கேள்வியாற்றல்.

clamp : பற்றுக்கருவி : ஒர் உறுப்பினை அல்லது கட்டமைப்பை அழுத்துவதற்கான அறுவைச் சிகிச்சைச் சாதனம்.

clap : மேகநோய் (வெட்டை) : வெட்டை நோய்த்தொற்று படர்தல்.

clapotement : சிதறல் ஒலி : நீரைச் சிதறியடித்தல் போன்ற ஒலி.

clara cell : கிளாரா உயிரணு : மூச்சுக்குழாய் மேல் திசுவில் உள்ள இழை உறுப்புகளைக் கொண்ட புறத்தோல் உயிரணுக்களிடையே துருத்திக் கொண்டிருக்கும் வட்டவடிவமான புறத்தோல் இல்லாத உயிரணு. ஆஸ்திரிய உடல் உட்கூறியலறிஞர் மாக்ஸ் கிளாரா-வின் பெயரால் அழைக்கப்படுகிறது.

clarificant : தெளிவுப் பொருள் : ஒரு திரவத்தின் கலங்கல் நிலையை தெளியச்செய்யும் ஒரு பொருள்.

clarithromycin : கிளாரித்ரோமைசின் : நோய் நுண்மங்களைக் கொல்லும் இயல்புள்ள ஒரு மேக்ரோலைடு. இது ஏராளமான கிராம்-நேர்வு, கிராம்எதிர்வு உயிரிகளுக்கு எதிராக வேலை செய்கிறது.

classification : வகைபாடு : சில பொதுவான பண்பியல்புகளின் அடிப்படையில் வர்க்கங்களாக அல்லது குழுமங்களாக முறை பட வகைப்படுத்துதல்.