பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

clastogenic

305

claw hand


clastogenic : பிளவுறுத்தம் : இனக்கீற்றுகள் போன்றவற்றை பிளவுறுத்துதல்.

claudication : நொண்டுதல்; கால் ஊனம்; கால் தசைவலி : கால் களுக்கு இரத்தம் செல்வது தடைபடுவதால் காலை நொண்டி நடத்தல், நாளங்களில் இசிப்பு அல்லது நோய் காரணமாக இது உண்டாகலாம்.

claustrophibia : ஒதுக்கிட அச்சம் : ஒதுக்கிடம் என்றாலே அச்சம் உண்டாகும் கோளாறு.

claustrophilia : தனிமை வேட்கை : ஒர் அடைக்கப்பட்ட அறையில் அல்லது இடத்தில் தன்னந்தனியாக இருக்க வேண்டும் என்பதில் இயல்பு கடந்த நாட்டம்.

claustrum : மூளை மென்படலம் : மூளைக்கோளங்களில் உள்ள சாம்பல் நிறப்பொருளின் மென்படலம்.

clavicle : கழுத்துப்பட்டை எலும்பு. கழுத்துப்பட்டை எலும்பு.

clavulanate : கிளாவுலானேட் : ஒரு பீட்டா லேக்டாமேஸ்; கட்டமைப்பில் நோய் நுண்மத் தன்மையுடையது. பெனிசிலினை எதிர்க்கும் உயிரினங்களில் லேக்டாமேசைச் செயலிழக்கச் செய்யும் பெனிசிலின் களுடன் தொடர்புடையது.

clavulanic : கிளாவுலானிக் அமிலம் : பென்சிலினை எதிர்க்கும் பாக்டீரியா உற்பத்தி செய்யும் செரிமானப் பொருளைத் தடை செய்வதற்கு அமோக்சிலினுடன் சேர்த்துப் பயன்படுத்தப் படும் அமிலம்.

clavus : எலும்புத் தடிப்பு : எடுப்பான எலும்பின் மீது அழுத்தம் காரணமாக உண்டாகும் தடிப்பு.

clawfoot : வளை நகப் பாதம்; வளை அங்கால்; புலிப்பாதம்; முடங்கு கால் : பாதத்தின் நீள வளைவு உயரத்தில் அதிகமாகும் ஒர் உறுப்புத் திரிபு. கால் விரல் பகுதி வளைந்து விடுவதால் இது உண்டாகிறது. இது பிறவியிலோ அல்லது நோயாலோ ஏற்பட்டு இருக்கலாம்.

claw hand : வளை நகக்கை; மடங்குகை; வளைவு அங்கை; முடக்கை :கை வளைந்து, வளைந்த நகம்போல் தோற்றமளித்தல். காயத்தினால் அல்லது நோயினால் இது உண்டாகலாம்.