பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

clearance

306

clindamycin


clearance : தடை ஒழிப்பு : 1. ஏதேனுமோரிடத்திலிருந்து எதையேனும் அகற்றும் செயல். 2. இரத்தத்திலிருந்து ஒரு பொருளை அகற்றுதல்.

cleft : பிளவு; வெடிப்பு : 1. முதிராக் கருநிலையில் ஏற்படும் ஒரு வெடிப்பு. 2. பிறவியிலேயே உதட்டில் ஏற்பட்டிருக்கும் ஒருபிளவு பொது மேலுதட்டில் மத்தியிலிருந்து சற்று விலகி இந்த பிளவு ஏற்பட்டிருக்கும். 3. மேல் வாய்ப்பகுதியான அண்ணத்தில் பிறவியிலேயே ஏற்பட்டிருக்கும் ஒர் இடைவெளி. பெரும்பாலும் பிளவு உதட்டுடன் இது சேர்ந்து இருக்கும்.

cleft palate : பிளவு அண்ணம்; அண்ணப் பிளவு : இடது, வலது அண்ணங்கள் பிறவியிலேயே இணையாமலிருத்தல், பிளவுபட்ட மேல் உதடு (ஒலு வாய்) என்ற கோளாறுடன் தொடர்புடையது.

cleidotomy : கருவாய் அறுவை : கடினமான மகப்பேற்றின் போது குழந்தைப் பேற்றினை எளிமை ஆக்குவதற்காக முதிர் கருவின் வாய்ப்பட்ட எலும்பினை அறுவைச் சிகிச்சை முறை பிளவுறுத்துதல்.

clifton assessment procedures for the Elderly : முதியோர்க்கான கிளிஃப்டோன் கணிப்பு நடைமுறை : முதியோரின் புலனுணர்வுச் செயற்பாடு. நடத்தை முறை ஆகியவற்றை அளவிடுவதற்கான பரிசோ தனைகளின் தொகுதி.

climacteric : வாழ்க்கைத் திருப்பு முனை : 1. வாழ்க்கையின் முக் கியத் திருப்புக்கட்டம். 2. உடல் மாறுதல் ஏற்படுவதாகக் கருதப்படும் நெருக்கடி கண்டம். 3. 45-60 வயதுகளுக்கு இடைப்பட்ட தளர்ச்சிமிக்க பருவத்தில் ஏற்படும் நெருக்கடியான நிலைமை. 4. ஒரு பெண் தன் வாழ் நாளில், தனது இனப்பெருக்க ஆண்டுகளில் இருந்து இனப்பெருக்கம் செய்யாத ஆண்டுகளுக்கு மாறும் காலக்கட்டம்.

climatotherapy : தட்பவெப்பச் சிகிச்சை : நோயாளியை அவர் குணமடைவதற்கு ஏற்புடைய தட்பவெப்ப நிலையுள்ள இடத்துக்குக் கொண்டு செல்வதன் மூலம் நோய்க்குச் சிகிச்சை யளித்தல்.

climax : முகட்டு நிலை : 1. ஒரு நோயின் மிகக்கடுமை வெளிப் படும் உயர்நிலை, 2. உணர்ச்சித் துடிப்பு.

clindamycin : கிளிண்டமைசின் : லிங்கோமைசினிலிருந்து கிடைக்கும் வழிப்பொருள்.