பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

clomipramin

309

Clostridium


clomipramin : குளோமிப்பிராமின் : சுறுசுறுப்பைக் குறைப்பதைத் தடுக்கும் மருந்துகளில் ஒன்று. 3-15 நாட்கள் இம் மருந்தினை உட்கொண்டபின் இது செயற்படத் தொடங்கும். இதனை நரம்பு வழியாகச் செலுத்தலாம்.

ciomocycline : குளோமோசைக்ளின் : டெட்ராசைக்ளின் மருந்தின் ஒரு திருந்திய வடிவம். நீண்டகால முகப்பருவுக்கு ஏற்றது.

clonality : பதிப்புருவாக்கத் திறன் : பதிப்புருக்கள் செய்வதற்கான திறம்பாடு.

clone : பதிப்புருவாக்கம்/படியாக்கம் : துல்லியமான நேர்ப் படிவாக்கம். பெரும்பாலும் நேரொத்த மரபு அணுக்களின் ஒரு குழுமத்தை அல்லது மரபணு முறையில் நேரொத்த உயிரணுக்களின் அல்லது உயிரி களின் ஒரு குழுமத்தைக் குறிக்கிறது.

clonidine : குளோனிடின் : மெத்தில் டோப்பா என்ற மருந்தினைப் போன்றது தாழ்ந்த குருதியழுத்த நிலையைக் குறைக்கிறது. எனினும், சில நோயாளிகளுக்கு வாய்வறட்சியை உண்டாக்குகிறது. இதனைச் சிறிதளவில் கொடுத்து வந்தால், கடுமையான ஒற்றைத் தலைவலியைத் தடுக்கிறது.

clonism : தசை இசிவு : அடுத்து அடுத்து உண்டாகும் தசை இசிவின் ஒருநிலை.

clonogenic : பதிப்புருவாக்கம் சார்ந்த : ஒரு பதிப்புருவாக்கத்தில் இருந்து எழுகிற அல்லது அதில் அடங்கியிருக்கிற.

chlonorchiasis : ஈரல் வீக்கம் : பித்த நீர் வழிகளைப் பாதிக்கிற ஈரல் தட்டைப் புழுவினால் உண்டாகும் ஒருவகை நோய். இது பச்சையான அல்லது சரியாக வேகவைக்காத மீன் உண்பதால் உண்டாகிறது. இதனால், பித்தநீர் நாளங்கள் வீக்கமடையும், கடுமையாக நோய் தொற்றும்; கல்லீரல் வீக்கம், ஈரல் அரிப்பு ஏற்படும்.

clonus : தசைத் துடிப்பு; வலிப்பு : மாறிமாறிச் சுருக்கமும் தளர்வு மாக வரும் தசைத் துடிப்பு.

Clostridium : குளோஸ்டிரிடிய நுண்ணுயிர் : ஒரு வகைப் பாக்டீரியா குருதி சிவப்பு நுண்ணுயிர் வகை. இது நரம்பிசிவு நோய். தகரக்கல உணவு நச்சுப்பாடு போன்ற நோய்களை உண்டாக்குகிறது.