பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

clot

310

clysodrast


clot : உறைகட்டி; உறைகுருதி : 1. இரத்தம் போன்று உறைந்து கட்டியாதல். 2. இரத்தம் அல்லது நிணநீர் போன்று மென்மையான உறைந்து போன ஒரு திரட்சி.

clotting factor : உறைவுக்காரணி : இரத்தம் உறைவதற்குத் தேவை யான, இரத்தத்திலுள்ள பல பொருள்களில் ஒன்று.

clotrimazole : கிளாட்ரிமாசோல் : பூஞ்சக்காளான் எதிர்ப்புவினை ஊக்கியாகப் பயன்படுத்தப்படும் இமிடாசோல் என்ற ஒரு வழிப் பொருள்.

clove oil : கிராம்பு என்ணெய் : கிராம்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய். இது, நோய்க் கிருமித் தடுப்பு, வயிற்று உப்புசத் தடுப்பு, நோயாற்றுதல் ஆகிய பண்புகளை உடையது. பல் வலியையும் போக்கக் கூடியது.

cloxacillin : குளோக்சாசிலின் : பென்சிலினை எதிர்க்கும் நோய்க் கிருமிக்கு எதிராகச் செயல்படும் ஒரு செயற்கைப் பென்சிலின். இதனை வாய் வழியாகக் கொடுக்கலாம்.

clubbed fingers : விரல் பருமன் நோய்; விரல் முனைத் திரள்; திரள் முனை விரல் : நகங்களுக்கு அடியில் விரல்கள் பருமனாகவும் அகலமாகவும் இருத்தல். இதற்கான காரணம் தெரிய வில்லை. எனினும் இதயநோய் அல்லது துரையீரல் நோய் உள்ளவர்களுக்கு இந்நோய் உண்டாகிறது.

clubbing : விரல் நுனி பருத்தல் : பூச்சிக்கடியினால் விரல் நுனி பருத்துப் போதல்.

clubfoot : கோணற்கால் (தொட்டிக் கால்); பிறவி வளைபாதம் : பிறவியிலேயே கால்கள் திருகு முறுகலாக அமைந்திருத்தல். இருகால்கள் அல்லது ஒருகால் கோணற்காலாக அமைந்து இருக்கலாம்.

clumping : குருதியணு ஒட்டித்திரள்; கொத்தாடுதல்.

cluster : குடல் கழுவு நீர்மம்.

cluster headache : ஒற்றைத் தலைவலி : முகமும், கழுத்தும் அடங்கிய தலையின் ஒரு பக்கத்தில் திடீரென ஏற்படும் கடும்வலி.

Clutton's joint : கிளட்டன் மூட்டு : பிறவியிலேயே உண்டாகும் கிரந்தி நோயில் முழங்கால் முட்டுகளில் ஏற்படும் ஒரு சீர்மை மூட்டிணைப்பு. பிரிட்டிஷ் அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஹென்றி கிளட்டன் பெயரால் அழைக்கப்படுகிறது.

clysodrast : கிளைசோடிராஸ்ட் : குடலை ஊடுகதிர்ப்படம் எடுப் பதற்கு ஆயத்தமாகக் குதவாய்