பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

codliver oil

315

Cofactor


முடிகிறது. இதனை உலகச் சுகாதார அமைவனம், "பன்னாட்டு நோய்கள் வகைப்பாடு" என்னும் பெயரால் தயாரிக்கிறது. இது தேசிய மற்றும் பன்னாட்டுப் பயன்பாட்டுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

codliver oil : மீன் எண்ணெய்;மீன் நெய் : நெய் மருந்தாகப் பயன்படும் மீன் ஈரல் எண்ணெய். இதில் வைட்டமின்-A வைட்டமின்-B அடங்கியுள்ளது. இந்த ஊட்டச் சத்துப் பொருள்கள் குறை பாட்டினை ஈடுசெய்ய இது கொடுக்கப்படுகிறது.

codominance : இனக் கீற்று நோய்நிலை : ஒரு மரபணுவின் ஒவ்வொரு இணை இனக்கீற்றும் ஒரு விளைவினை வெளிப்படுத்துகிற ஒரு நோய் நிலை.

coefficient : குணக்ம் : 1. 905 பொருளின் இயல்பு அளவின் அல்லது அளவு வீதத்தின் எண்ணுருக் கோவை. 2. இரு மாறுபட்ட அளவுகளுக்கிடை யிலான விகிதத்தின் அல்லது மாறுபட்ட சில காரணிகளினால் உண்டாகும் விளைவின் எண்ணுருக் கோவை.

coelenterata : ஒற்றை வயிற்றுக் குழி உயிரினம் : நீர்ப்பாம்பு, இழுது மீன், கடற்பஞ்சு போன்ற வயிற்றுக்குழி உயிரினங்கள்.

coeliac : வயிற்றுக்குரிய; உடற் குழி : அடிவயிற்றுக் குழிசார்ந்த, தமனிகள், சிரைகள், நரம்புகள் ஆகியவற்றையும் குறிக்கும்.

coeliac disease : வயிற்றுக்குழி நோய் : மாப்புரதத்தினால் உண்டாகும் குடல் நோய். இதனால் கடும் வயிற்றுப் போக்கு ஏற்படும்; வளர்ச்சி குன்றும், இரத்த சோகை உண்டாகும். பிற சத்துக் குறை பாடுகளும் ஏற்படும். கோதுமை அல்லது பிற மாப்புரதம் உள்ள தானிய உணவுகளைக் கொடுக்கும் போது தொடக்கத்தில் குழந்தைகளுக்கு இந்நோய் ஏற்படும். வயது வந்தவர்களுக்கும் உண்டாகும்.

coelom : வயிற்றுக்குழி : பவழம் போன்ற பல உயிர்மங்கள் கொண்ட உயிரினங்களுக்கு மேம்பட்ட உயிர்வகைகளின் வயிற்றுக்குழி. இது நுரையீரல், வயிற்றுள்ளுறை, குலையுறைக் குழிகளாக வளர்கிறது.

coenzyme : செரிமான ஊக்கி; துணை நொதிப்பி; இணை என்சைம் : ஒரு செரிமானப் பொருளைச் (என்சைம்) செயற்பட ஊக்குவிக்கும் பொருள்.

cofactor : சகக் காரணி : குருதிச் சிவப்பு, சகசெரிமானப் பொருள்கள், மக்னீசியம் அயனிகள் போன்ற செரிமானப் பொருள் வினைக்கு இன்றியமையாத ஒரு தனிமம்.