பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

collapse

318

collimator


collapse : தளர்ந்து வீழ்தல்; செயல் ஒடுக்கம்; செயல் சரிவு : ஒடுங்கல், தகர்வு உட்புழையுள்ள உறுப்பு அல்லது நாளம் தளர்ந்து உள்வீழ்தல். எடுத்துக்காட்டாக, துரையீரல், உள் காற்று அழுத்த மாற்றத்தினால் தகர்ந்து வீழ்தல். மனம் இடிந்து போவதாலும் தளர்ச்சி ஏற்படுவது உண்டு.

collapsing pulse : நாடித்துடிப்பு வீழ்ச்சி; குறையழுத்த நாடி; வீழ்நாடி : பெருந்தமனியின் உள் அழுத்தவிசைக் குறைவினால் நாடித்துடிப்பு வீழ்ச்சியடைதல்.

collapsotherapy : ஒடுங்கல் மருத்துவம் : செயற்கை நுரையீரல் காற்று நோய்ச் சிகிச்சை மற்றும் மார்புக்கூடு அறுவைச் சீரமைப்பு. காச நோயால் பாதிக்கப்பட்ட நுரையீரலுக்கு ஒய்வு கொடுப்பதற்காக காச நோய் எதிர்ப்பு மருந்துகள் கொடுப்பதற்கு முன்பு இது செய்யப்படுகிறது.

collar bone : காறையெலும்பு.

collateral : பக்கக்கிளை : ஒரு பிரதான உறுப்புக்குரிய இணை உறுப்பு அல்லது துணை உறுப்பு. 2. ஒரு நாளத்தின் அல்லது நரம்பின் அருகருகே செல்லும் பக்கக் கிளை.

collateral circulation : பக்கக் குருதியோட்டம்; மாற்றுவழிக் குருதியோட்டம்; ஒத்திசைவான குருதியோட்டம் : முதன்மை இரத்தக் குழாய்கள் அடைபட்டிருக்கும்போது, துணை இரத்தக் குழாய்கள் மூலம் இரத்தவோட்டம் நடைபெறு வதற்கு மாற்றுவழி அமைத்தல்.

collecting tubule : சேகரிப்பு நுண் குழல் : முனைகோடி சுருள் மடிப்பு நுண் குழல்களிலிருந்து சிறுநீரகக் குழிக்குள் சிறுநீரைக் கொண்டு வந்து சேர்க்கும் பெரிய சிறுநீரக நுண் குழல்கள். சிறுநீர்ப்பெருக்கத் தடுப்பு இயக்குநீர், இந்தச் சேகரிப்பு நுண் குழல்களில் நீர் ஊடுருவும் படிசெய்து, திரவச் சமநிலையைப் பேண உதவுகின்றன.

Colles's fracture : கோலஸ் முறிவு : ஆர எலும்பின் முனை கோடியில் ஊடுவெட்டு முறிவு. இதனால் கை பின்புறமாகவும் வெளிப்புறமாகவும் இடம் பெயர்ந்துவிடும். அயர்லாந்து அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஆபிரகாம் கோலஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

collimation : நேர்வரிப்பாடு : 1. ஒளிக்கதிர்களை ஒரு போக்கு உடையதாகச் செய்தல். 2. ஊடுகதிர்க் கற்றையை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் செல்லுமாறு கட்டுப்படுத்துதல்.

colimator : வரிக்குழாய் : ஊடுகதிர் வண்ணப்பட்டையில் பட்டை மீது நேர் இணை