பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

colliquation

319

colocystoplasty


வரிக் கதிர்களை வீசுகிற ஒளிக் குழாய்.

colliquation : நரிவுறத்தல் : 1. உடல் திரவம் அளவுக்கு அதிகமாக வெளியேறுதல். 2. திசுக்கள் மென்மையடைதல். 3. திசுக்கள் சிதைவடைதல்.

colliquative : நீர்மமாதல் : திரவம் அளவுக்கு அதிகமாக வெளி யேறுவதை அல்லது திசுக்கள் நீர்மமாவதைக் குறித்தல்.

collision tumour : மோதல் கட்டி : இரு உறுப்புகளில் காணப்படும் தனித்தனிக் கட்டிகள் மிக அரிதாக ஒன்றிணைதல். இரைப்பை- உணவுக்குழல் இணைப்பில் இது காணப்படும்.

collodion : கொல்லோடியன் : பிசினும், விளக்கெண்ணெயும் கலந்த பைராக்சிலின் கரைசல். இது தோலில் நெகிழ்திறன் கொண்ட படலமாகப் படிகிறது. இது பாதுகாப்புக் கட்டுப் போடுவதற்குப் பயன்படுகிறது.

colloid : இழுதுபொருள் (கரைத்தக்கை); கூழ்மம்; கூழ்மப் புரதம் : கரைந்த நிலையினும் சவ்வூடு செல்லுமளவு ஒன்றுபட்டுக் கலவாக் கூழ்நிலைப் பொருள்.

colloidal gold test : கரைதக்கைத் தங்கச் சோதனை; கூழான தங்கச் சோதனை : நரம்புக் கிரந்தி நோயைக் கண்டுபிடிப்பதற்கு மூளைத் தண்டுவட நீரைக்கொண்டு செய்யப்படும் பரிசோதனை.

colloidoclasia : இழுதுபொருள் கலப்பு : இரத்த ஒட்டத்தினுள் இழுதுபொருள்கள் நுழைதல், இதனால் அயற்பொருள் தாங்கா அதிர்ச்சி உண்டாகும்.

coloboma : கண்விழி வெடிப்பு; விழி உருக்குறை : கண்விழியில் அல்லது அதன் பகுதிகளில் ஒன்றில், பிறவியிலேயே ஏற்படும் வெடிப்பு அல்லது பிளவு.

colocecostomy : பிணைப்பு அறுவை மருத்துவம் : பெருங்குடலையும் பெருங்குடல் வாயையும் அறுவைச் சிகிச்சை மூலம் குருதிநாளப் பிணைப்பு செய்தல்.

colocentesis : பெருங்குடல் துளையிடல் : பெருங்குடல் விரிவாக்கத்தைத் தடுப்பதற்காக அறுவை மருத்துவம் மூலம் அதில் துளையிடுதல்.

colocolostomy : பெருங்குடல் வழி அறுவை : பெருங்குடலின் இரு பகுதிகளுக்கிடையில் அறுவைச் சிகிச்சை முறையில் ஒரு வழி உண்டாக்குதல்.

colocystopiasty : சிறுநீர்ப்பை அறுவை மருத்துவம் : பெருங்குடலின் ஒரு பகுதியைப் பயன்படுத்திச் சிறுநீரகப்பையின் கொள்ளளவை அதிகரிப்பதற் கான அறுவை மருத்துவம்.