பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

colpomicroscope

322

commensals


colpomicroscope : யோனிக்குழாய் நுண்ணோக்கோடி : யோனிக் குழாயிலும், கருப்பை வாயிலும் உள்ள உயிரணுக்களை நுண்ணாய்வு செய்வதற்கான ஒரு தனிவகை ஒளியியல் சாதனம்.

colpomyomotomy : கருப்பைக் கட்டி அறுவை : கருப்பைத் திசுக் கட்டியை அகற்றுவதற்காக யோனிக்குழாய் மூலமாகக் கருப்பையைக் கீறுதல்.

colpoperineorrhaphy : யோனிக் குழாய் மருத்துவம்; அல்குல் அடித்தளத் தைப்பு : காயமுற்ற யோனிக் குழாயையும், கருவாய்க்கும் பெண் உறுப்புக்கும் இடைப்பட்ட பகுதியையும் அறுவைச் சிகிச்சை மூலம் சீர்படுத்துதல்.

colpopexy : யோனிக் குழாய் இணைப்பு : பிதுங்கிய யோனிக் குழாயை அடிவயிற்றுச் சுவற்றுடன் தைத்து இணைத்தல்.

colposcope : யோனிக்குழாய் அகநோய்க் கருவி : யோனிக் குழாயிலும், கருப்பைவாயிலும் உள்ள திசுக்களை உருப்பெருக்காடிகள் மூலமாக கண்ணால் பார்வையிடுவதற்கான ஒர் அகநோவிக்குக் கருவி.

columella : சிதல்விதை மையம் : 1. ஒரு சிறிய நரம்பு நாள மையம். 2. சிதல்விதையுறையிலிருந்து உருவாகும் கருவணுவின் ஒரு பகுதி.

coma : முழு மயக்கநிலை; ஆழ் மயக்கம்; நிறை மயக்கம் : எல்லா உணர்ச்சிகளையும் இழந்து செயலற்றிருக்கும் முழு மயக்கநிலை.

combined oral contraceptive : ஒருங்கிணைந்த கருத்தடை மாத்திரை : வாய்வழி உட் கொள்ளப்படும் பலவகை கருத்தடை மருந்துகள். பொது வாக, இது மாத்திரையைக் குறிக்கிறது.

combustion : உள்ளெரிதல் : 1. எரிதல். 2. வெப்பம் உண்டாகி ஆக்சிகரணமாதல்.

comedo : தோலடிச் சுரப்பி : தோலுக்கடியில் காணப்படும் கரியமுகடு கொண்ட வெண் நிறமான சுரப்பி வகை.

comes : இணை நாளம் : ஒரு நரம்போடு அல்லது மற்றொரு இரத்த நாளத்தோடு இணைந்து செல்லும் ஒர் இரத்த நாளம்.

commensalism : கூட்டு வாழ்வுத் தொடர்பு : இது ஒரு கூட்டு வாழ்வுத் தொடர்பு. இதில் ஒர் உயிரி, நலனைப் பெறுகிறது; மற்ற உயிருக்குத் தீங்கு ஏற்படுவதில்லை.

commensals : உடனுண்ணிகள்; கூட்டுவாழ்வு உயிரிகள் : ஒன்றுக் கொன்று உதவிக் கொண்டு ஒரே உணவை உண்டு இணைந்து வாழும் உயிரிகள்.