பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

commissurorraphy

323

complementary feed


commissurorraphy : நரம்பு இணைப்புச் சிகிச்சை : துளையின் அளவினைக் குறைப்பதற்காக, இருநரம்பு மையங்களை இணைக்கும் நரம்பிழைத் தொகுதி ஒன்றின் பகுதிகளைத் தைத்து இணைத்தல்.

commode : கோக்காலி : பயன் படுத்தும்போதும் ஒருவர் வசதியாக உட்கார்ந்து கொள்வதற்கு இயல்விக்கும் ஒரு கோக்காலி.

communicable : தொற்று நோய்; தொற்று; பரவக்கூடிய : ஒருவர் இடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாக அல்லது பிற சாதனங்கள் வழி பரவக்கூடிய நோய்.

compaction : உறுப்புப் பிணைப்பு : 1. இரட்டைக் குழந்தை கருப் பையிலிருந்து வெளிவரும்போது, அவ்வாறு வெளி வருவதைத் தடுக்கும் வகையில் வெளிவரும் உறுப்புகள் ஒன்றோடு ஒன்று ஒரே சமயத்தில் பிணைந்து கொள்ளுதல். 2. பற்குழியைத் தங்கத்தினால் நிரப்புதல்.

compatibility : ஒத்தியல்பு; பொருந்தும் பண்பு; ஒவ்வுமை : உடனியைபு. இரண்டு மருந்துகள், இரத்த உயிரியல் பொருள்கள், உயிரணுக்கள் போன்றவை பாதகமான விளைவுகள் ஏற்படாமல் ஒன்றோடொன்று ஒத்து இயங்கும் இயல்பு.

compensation : சரிஈடு செய்தல்; ஈடுசெய்தல்; இழப்பீடு : ஒருவர் தன்னிடமுள்ள சமூகத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு பண்பினை முனைப்பாக (எ.டு.) தன்னிடமுள்ள ஒரு பலவீனத்தை மூடிமறைக்கக் கையாளும் உளவியல் தந்திரம்.

competence : தகுதிறன் : 1. ஒரு காப்பு மூலத்துக்கான எதிர்த் தூண்டுதலை ஏற்றுகிற நோய்த் தடுப்புத்திறன். 2. போதிய முடி வெடுப்பதற்குத் தேவையான திறன்களின் தொகுதி. 3. ஒரு மருத்துவர் தமது தனித்திறமையைத் நடைமுறைப் படுத்துவதற்கு அவருக்குள்ள திறமை.

Complan : காம்ப்ளான் : உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்குரிய ஒரு தூள். உணவின் வணிகப் பெயர். இதில் 100 கிராம் தூளில், 31 கிராம் புரதம், 16 கிராம் கொழுப்பு, 44 கிராம் கார்போஹைட்ரேட்டு, போதியளவு கனிம உப்புகள், வைட்டமின்கள் அடங்கியுள்ளன. இதனை வாய் வழியாகவோ திரவமாகவோ உட்கொள்ளலாம்.

complemental air : குறைநிறப்புக் காற்று; நிரப்புக் காற்று : ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் நுரையீரல்களுக்குள் இழுக்கப்படும் கூடுதல் காற்று.

complementary feed : குறை நிரப்பு உணவு நிரப்புணவூட்டல்: