பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cónditioning

327

cone


மணியடித்ததும் நாக்கில் எச்சில் ஊற வருவது இதற்கு எடுத்துக் காட்டு.

conditioning :தகவமைப்பு; கட்டுப்பாட்டுக்குட்பட்ட; விதிக்கிணங்க : தக்க சூழ்நிலையை அமைத்து புதிய நடத்தை முறையை உக்குவித்தல்.

condom : கருத்தடை உறை: அல்குல் உறை; பெண்குறி உறை : பாலுறவின்போது ஆணும் பெண்ணும் அணிந்து கொள்ளும் சவ்வு போன்ற ரப்பரிலான காப்பு உறை. இதை அணிந்து கொள்வதால் பாலுறவு நோய் பரவாமல் தடுக்கலாம்.

conduction : கடத்துதல்; கொண்டு செய்கை : பொருத்தமான ஊடகத்தின் மூலம் வெப்பம் ஒளி, ஒலி அலைகளைக் கடத்துதல். மின்னோட்டங்களைக் கடத்துவதையும், உடல் திசுக்களின் வழியாக நரம்புத் தூண்டல்களைச் செலுத்து வதையும் இது குறிக்கும்.

conductor : கடத்தி : வெப்பம், ஒளி, ஒலி, மின்னோட்டம் போன்றவற்றைக் கடத்துகிற ஒரு பொருள் அல்லது ஊடகம்.

condyle : எலும்புமுனை முண்டப் பொருத்து எலும்புப் புடைப்பு : எலும்பு முண்டு; எலும்பு வட்டப் புடைபபு.

எலும்பு முண்டு

condyloma : கரணை வளர்ச்சி; முண்டுப் புற்று : சளி வரும் வழி களுக்கருகில் கரணை போன்ற தோலின் புற வளர்ச்சி.

condy's fluid : நச்சுத்தடை மருந்து : நச்சுத்தடை மருந்தாகப் பயன்படும் சோடியம் பெர்மாங்கனேட்டுக் கரைசல். மாற்றாக, பொட்டாசியம் பர்மாங்கனேட்டும் பயன் படுத்தப்படுகிறது.

cone : கூம்பு : 1. வட்ட அடித்தளத்திலிருந்து கூர்மையாகிக் கொண்டுசெல்லும் ஒரு வடிவம் அல்லது உருவம். 2. விழியின் பின்புறத்திரையின் ஒளி ஏற்பிகளில் ஒன்று. 3. கதிர்வீச்சுக்