பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

constellation

331

containment isolation


இறுகுதல் : வலுப்படுத்தும் சிகிச்சை முறை. சீதசன்னியில் (நிமோனியா) கசிவு கூட்டிணைவு காரணமாக நுரையீரலுக்கு ஏற்படும் நிலையைச் சீர்படுத்து வதற்கான சிகிச்சை.

constellation : குழுமம் : பொருள்களின், தனிமனிதர்களின் அல்லது சூழ்நிலைகளின் ஒரு குழுமம், கூட்டம் அல்லது இணைவு.

'constipation : மலச்சிக்கல்; மலக்கட்டு; மல அடைப்பு : போதியளவு உணவு அல்லது திரவம் உட்கொள்ளாத காரணத்தால் அல்லது இரைப்பைத் தசைகள் சீராக இயங்காத காரணத்தால் உண்டாகும் நிலை.

constitution : உடல் அமைப்பு; உடல்வாகு; வாகு.

constrictor : இறுக்கும் பொருள் : 1. நெருக்கி இறுக்கும் பொருள். 2. நெருங்கி அழுத்தும் தசை.

consumption : நோய்நலிவு : அழிவு; தேய்வு; மெலிவு. ஒரு சமயம் உடலை நலிவடையச் செய்யும் எலும்புருக்கி நோயைக் (காசநோய்) குறிக்க இச்சொல் பயன்பட்டது.

consumptive : காசநோயாளி : நுரையீரல் காசநோயுடையவர்; எலும்புருக்கி நோயாளி; அழிவு உண்டாக்கும் நோயர், எலும்புருக்கி நோய் பீடித்தவர்.

contact : நோய்த் தொற்றிணைப்பு; தொடர்பு; தீண்டல்; தொடுகை; தொற்று : நோய் தொற்றக்கூடிய அளவுக்கு நெருக்கம்.

contactant : ஒவ்வாமை ஊக்கி : தோலுடன் அல்லது சளிச் சவ்வுடன் நேரடித்தொடர்பு காரணமாக மிகை உணர்வு உண்டாக்கக்கூடிய ஒவ்வாமை ஊக்கி.

contact-lens : விழியொட்டு வில்லை; ஒட்டுவில்லை : கண் பார்வைக்கோளாறுகளைத் திருத்தக் கண்விழியோடு ஒட்டி அணியப்படும் குழைமக் கண்ணாடிவில்லை.

contagion : தொற்று;ஒட்டு : ஒட்டுவாரொட்டி நோய் தொற்றுதல், தொற்று நச்சுக்கூறு.

contagionist : தொற்று நோய் வல்லார் : ஒரு நோய் தொற்றவல்லது என்ற கோட்பாட்டாளர்.

contagious : தொற்று பரப்புகிற; தொற்றுத் தன்மையுடைய; ஒற்று; தொற்று; ஒட்டு வாரொட்டி : தொடர்பினால் ஒட்டிக்கொள்ளக் கூடிய தொற்றுநோய் கொண்டு செல்கிற.

containment isolation : நோய்த் தடுப்பு ஒதுக்கிவைப்பு : ஒரு நோயாளியைப் பீடித்துள்ள நோய் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுப்பதற்காக நோயாளியைத் தனிமையில் ஒதுக்கி வைத்தல்.