பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

contamination

332

cortrafissura


contamination : தொற்றுப் பொருள் : உடல்பரப்பிலும், துணிகளிலும், படுக்கையிலும், சாதனங்களிலும் நீர், பால், உணவு உட்பட பிற பொருள்களிலும் தொற்று நோய் உண்டாக்கக் கூடிய ஒரு பொருள் இருத்தல்.

continence : நுகர்வடக்கம் : 1. இயற்கைத் துண்டல்களைக் கட்டுப்படுத்தும் திறன். 2. தற் கட்டுப்பாடு.

continent : கட்டப்பட்ட : 1. சிறு நீர் கழித்தல், மலங்கழித்தல், போன்ற உணர்வுகளை கட்டுப் படுத்திவைத்திருத்தல். 2. சிற்றின்ப நுகர்வுஅறவே நீக்கிய.

continuous ambulatory perito neal dialysis (CAPD) : இடையறா இயங்கு வபைப் பிரிவினை : நோயாளி வபைப் பிரிவினையில் இருக்கும்போது அவர் இடம் விட்டு இடம் இயங்கிக் கொண்டிருத்தல்.

continuous positive airways pressure (CPAP) : பற்குழித் தகர்வுத் தடுப்பு மருத்துவம் : பல் பொருந்து குழித் தகர்வினையுடைய குழந்தைகளை ஒளி ஊடுருவுச் சவ்வு நோயிலிருந்து பாதுகாப்பதற்கான சிகிச்சை முறை.

continuous subcutaneous in-sulin infusion : கணையச் சுரப்பு நீர் தொடர் செலுத்தம் : நீரிழிவு நோயை உள்உட்கூறியல் முறையில் கட்டுப்படுத்துவதற்காகக் கணையச் சுரப்பு நீரை அடித்தோல் வழியாகச் சிறிது சிறிதாகத் தொடர்ந்து செலுத்துவதற்கு இறைப்பானைப் பயன் படுத்துதல்.

contraception : கருத்தடை.

contraceptive : கருத்தடைச் சாதனம்; கருத்டை மருந்து : கருவு றாமலிருப்பதற்காக ஆண்பெண் அணிந்துகொள்ளும் சாதனம். வாய்வழி உட் கொள்ளப்படும் மாத்திரைகளையும் இது குறிக்கும்.

contract : நோய் பீடித்தல் : நோய்கள் எளிதில் பற்றுதல் அல்லது தொற்றுதல். நோயுடன் தொடர்பு.

contractile : தசைச்சுருக்கம;: சுருங்கு தசை : தசைத் திசுக்கள் எளிதில் சுருங்கக்கூடிய ஆற்றல் கொண்டிருத்தல்.

contractility : குருக்கம் : வளவைக் குறுக்குகிற அல்லது சுருக்குகிற திறன்.

contraction : தசையிழைச் சுருக்கம்; இறுக்கம்; சுருக்கம் : தசை இழைகள் இறுக்க மடைந்து சுருக்கமடைதல்.

contrafissura : எதிர்நிலை முறிவு : மண்டையோட்டில் உள்ளது போன்ற ஓர் எலும்பில் அடிபட்ட இடத்திற்கு நேர் எதிரான புள்ளியில் ஏற்படும் முறிவு.