பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

convulsive therapy

334

coprolalia


மூளை நோய் போன்ற மகன் கோளாறுகளைக் குணப்படுத்த இந்த முறை பயன்படுகிறது.

convulsive therapy : அதிர்வு மருத்துவம்; வலிப்பு மருத்துவம் : மின்விசை மூலம் அதிர்ச்சியளித்துச் சிகிச்சையளிக்கும் மருத்துவ முறை.

cooley's anaemia : கூலே குருதிச் சோகை : இரத்தத்தில் ஏற்படும் 'தாலசேமியா மேஜர்’ எனப்படும் மரபணுக்கோளாறு. இது தாமஸ் கூலே என்ற குழந்தை மருத்துவ அறிஞரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

cooling : வெப்பநிலைக் குறைப்பு : உடல்வெப்பநிலையை பனிக் கட்டிப் பைகள் அல்லது குளிர் ஈரத்துணி மூலம் வெப்ப நிலையைக் குறைத்தல்.

coomb's test : சிவப்பணு எதிர்ப் பொருள்சோதனை : இரத்தச் சிவப்பணுக்களுக்கு எதிரான உயிர்ப்பொருள்களைக் கண்டறிவதற்கான மிகுந்த உணர் திறனுடைய சோதனை முறை.

cooper's ligament : கூப்பர் தசை நார் : மார்பகத்தில் காணப்படும் ஆதார இழைம அமைப்புகள். பிரிட்டிஷ் அறுவைச்சிகிச்சை வல்லுநர் சர் ஆஸ்ட்லி கூப்பரின் பெயரால் அழைக்கப் படுகிறது.

coordination : ஒருங்கியக்கம்; ஒருங்கிணைவு; ஒருங்கிசைவு : உடல், தசை ஒன்றோடொன்று ஒருங்கிசைந்து இயங்குதல். இதனால் உறுப்புகளின் அசைவுகள் முழுக்கட்டுப்பாட்டுடன் நடைபெறும்.

copper : செம்பு : தாமிரம் விலங்குத் திசுக்கள் அனைத்திலுமுள்ள இன்றியமையாத தனிமம். இது சிலவகைப் புரதங்களிலும், செரிமானப் பொருள்களிலும் (என்சைம்) ஒர் அமைப்பானாகும்.

coping : சமாளிப்பு முறை : 1. ஒருவர் மன அழுத்தத்தைச் சமாளித்து, சிக்கலுக்குத் தீர்வு கண்டு, ஒரு முடிவு எடுக்கும் ஒரு செய்முறை. 2. ஒரு பல்லின் முகட்டில் அல்லது அடிவேரில் பூசப்படும் மெல்லிய உலோகப் பூச்சு.

coproantibody : குடுல் தற்காப்பு மூலம் : குடலிலுள்ள பொருள்களில் உண்டாகும் ஒரு தற்காப்பு மூலம். இது குடல் சளிச் சவ்விலுள்ள குருதிநீர் உயிரணுக்களினால் உண்டாகிறது.

coprolalia : ஆபாசமொழி; இழி மொழி; ஆபாசப்பேச்சு : மூளையின் முன்புறப்பகுதி சீர் கெடுவதால் உண்டாகும் மூளைக் கோளாறின் அறிகுறியாக ஆபாசமாக அல்லது அசிங்கமாகப் பேசுதல்.