பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

corynebacterium

339

cot death


corynebacterium : கோர்ன்பாக்டீரியம் : பாக்டீரிய வகையைச் சேர்ந்த கிராம் சாயம் எடுக்கும் தன்மையுடைய பாக்டீரியம்.

coryza : மண்டைச்சளி (தடுமன்) சளி, நீர்க்கோள் : குறைந்த காலம் நீடிக்கக்கூடிய தடுமன் நோய். இது மிக விரைவாகத் தொற்றக்கூடியது.

cosalgesic : கோசால்ஜெசிக் : டெக்ஸ்டிரோப்புரோப் ஆக்சிஃபீன், பாராசிட்டமால் ஆகிய இரண்டும் கலந்த கலவை மருந்தின் வணிகப் பெயர்.

cosmesis : ஒப்பனை மருத்துவ முறை : நோயாளியின் தோற்றம் பற்றிய அறுவைச் சிகிச்சை நடைமுறைகள். இது ஒப்பனைக்காகச் செய்யப்படும் அறுவைச்சிகிச்சை அல்லது சிகிச்சைமுறை.

cosmetic : ஒப்பனைப் பொருள் : முகம், முடி ஆகியவற்றை அலங்கரிப்பதற்குப் பயன்படும் சிங்காரிப்புப் பொருள்.

costa : விலா எலும்பு : 1. விலா விலுள்ள நீண்ட வளைவான 24 எலும்புகளில் ஒன்று. 2. உடலின் பக்கத்திலுள்ள விலா எலும்பினைச் சார்ந்த.

costal : விலா எலும்பு : உடலின் பக்கத்திலுள்ள எலும்பு.

costate : விலா எலும்புள்ள.

costive : மலச்சிக்கலுள்ள.

costochondritis : விலாக் குருத்தெலும்பு அழற்சி : விலாக் குருத் தெலும்பு இணைப்புகளில் ஏற்படும் வீக்கம். இதில் விலாக் குருத்தெலும்பு இணைப்புகளின் மீது உறுப்பெல்லைக்குள் இலேசான வலியும் மென்மைத் தன்மையும் உண்டாகும்.

costochondritis : விலாக் குருத்தெலும்பு அழற்சி : விலாக் குருத் தெலும்பில் ஏற்படும் வீக்கம்.

costoclavicular : விலா-கழுத்துப் பட்டை எலும்பு நோய்.

costotransverse : விலா குறுக்கீட்டுத் தசை சார்ந்த : விலா எலும்புகள், முள்ளெலும்புகளின் குறுக்கீட்டுத் தசைகள் தொடர்புடைய.

costovertebral : விலா-முள்ளெலும்பு சார்ந்த : விலா எலும்புகள், மார்பக முள்ளெலும்புகள் சார்ந்த.

costoxiphoid : விலா மார்பு எலும்பு சார்ந்த : விலா எலும்புகள், மார்பெலும்பின் கீழ்க் கோடிக் குருத்துசார்ந்த.

cotazym : கோட்டாசைம் : கணையச் செரிமானப் பொருளின் (என்சைம்) வணிகப் பெயர்.

cot death : கட்டில் மரணம் : ஒரு குழந்தை இரவில் கட்டிலில் தூங்கும் போதே சிறிதும் எதிர்பாராமல் திடீரென ஏற்படும் மரணம். ஒரு மாதம் முதல் ஒரு வயது வரையுள்ள