பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cotyledon

340

counterstain


குழந்தைகளுக்கு இந்த மரணம் உண்டாகிறது. இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பிறக்கும்போது குறைந்த எடையுடைய குழந்தைகளுக்கு 2 மாதங்களில், பின் பனிக்காலத்தில் பெரும்பாலும் இந்த மரணம் குளிர் பகுதிகளில் உண்டாகிறது.

cotyledon : கருப்பை உட்பிரிவு : நச்சுக் கொடியின் கருப்பைப் பரப்பிலுள்ள உட்பிரிவுகளில் ஒன்று.

cough : இருமல் : மூச்சுக்காற்று வழிகளில் புகும் அயல்பொருள் களை அல்லது திரளும் சுரப்புகளை அகற்றுவதற்காக அனிச்சைச்செயலாக அல்லது தன்னுணர்வுடன் துண்டப்படும் ஒரு பாதுகாப்புச் செயல்முறை.

cough-drop : இருமல் சொட்டு மருந்து.

coulomb : மின்னலகு கூலாம்ப் : ஒரு நொடியில் ஒரு ஆம்பியர் மின்னலகால் ஈர்க்கப்படும் மின் விசையின் அளவு. ஃபிரெஞ்சு இயற்பியலறிஞர் சி. கூலாம்ப் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

coumarin : கூமாரின் : செடி கொடி வகைகளிலிருந்து கிடைக்கும் படிக உருவ மணப் பொருள் வகை. இது K வைட்டமின் சார்ந்த உறைவுக் காரணிகளின் கல்லீரலுக்குரிய கூட்டிணைப்புக் கூட்டுப்பொருள்.

count : கணிப்பு : கணக்கிடுதல். பொருள்களின் ஒரு கன அளவுக்கு எந்த அலகுகள் என்று எண்மான முறையில் கணக்கிடுதல். இதன்படி பாக்டீரியாக்கள், இரத்த உயிரணுக்கள், பல்வேறு வெள்ளி உயிரணுக்கள் போன்றவை கணக்கிடப்படுகின்றன. கதிர் வீச்சின் அளவு ஒருகால அலகு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

counteraction : எதிர்வினை : ஒரு வினையூக்கிக்கு எதிரான செயல்முறையை உடைய ஒரு மருந்தின் வினை.

counterincision : எதிர்வெட்டு : ஒரு சுத்தமான காயம் அடை யும்போது அதிலிருந்து சீழை வெளியேற்றுவதற்காக காயத்தின் விளிம்புகளில் இரண்டாம் முறைசெய்யப்படும் கீறல்.

counter-irritant : உடலெரிவு மருந்து; எரிவூட்டி : உடலெரிவு மூலம் நோய்த்தீர்வு நாடும் மருந்துவகை.

counter-poison : நச்சு மாற்று : நச்சுமுறிவு மருந்து.

countershock : எதிர் அதிர்ச்சி : இதயக்கீழறைத் தசைத் துடிப்பைத் தடுப்பதற்காகவும், சீரான மின்னியல் நடவடிக்கையை மீட்பதற்காகவும் இதயத்துக்குக் கொடுக்கப்படும் உயர்அழுத்த மின்னோட்ட அதிர்ச்சி.

counterstain : எதிர்கறை பொருள் : முந்தையக் கறையை எடுப்பாகக்