பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

crystalluria

347

Cupping


crystalluria : பளிங்கு பொருள் கழிவு : பளிங்கு போன்ற பொருள்கள் வெளியேறுதல்.

crystal violet : பளிங்கு ஊதா; படிக ஊதா : பிரகாசமான ஊதா நிறமுடைய, நச்சுத்தடை அணிலின் சாயம். புண்கள், தோல் நோய்கள் ஆகியவற்றுக்கு 0.5% கரைசலாகப் பயன்படுகிறது.

crystalline : பளிங்கு; படிகம் படிக : ஒளி எளிதில் ஊடுருவக் கூடிய, படிகம் போன்ற அமைப்புடைய அமைவுகள். விழித் திரைப்படலத்தின் முன்புறமுள்ள முட்டைவடிவமுள்ள குமிழ். ஒளி எளிதில் ஊடுருவக் கூடிய கண்முகப்புக் குமிழ் எனப்படும்.

cubital : முழங்கை சார்ந்த : முன் கை எலும்பு அல்லது முழங்கை தொடர்பான.

cubital tunnel syndrome : முழங்கை எலும்புப்புழை நோய் : முழங்கையில் முன்கை எலும்பில் ஏற்படும் புழை. இதனால் வலி, மரத்துப் போதல், பின்னர் தசை நலிவு ஏற்படும்.

cuirass : செயற்கைச் சுவாசக் கருவி; மார்புக்கவசம் : செயற் கையாகச் சுவாசிப்பதற்காக உடலில் கவசம் போல் பொருத்தப்படும் ஒர் எந்திரச் சாதனம்.

culdoscopy : உள்ளுறுப்புக் காட்சிக் கருவி; அல்குல் வழி இடுப்புக் குழி நோக்கல் : உடலின் உட்புறம் காண உதவும் கருவி. இது யோனிக் குழாய் வழியாகச் செலுத்தப்படுகிறது.

culture : நுண்ணுயிர் வளர்ப்பு; பண்ணை; வளர்மம் : நுண்ணு யிரிகளில் செயற்கையான ஊடகங்களில் பொருத்தமான சூழ்நிலைகளில் வளர்த்தல்.

cumulative action : திரள் வினை; குழுமிய செயல்; குவிந்த; தொடர் சேர்மை : மெதுவாக வெளியேறும் மருந்தின் வேளை அளவினை அடிக்கடிக் கொடுப்பதால், அதன்வினை அதிகரிக்கிறது. இதனால் உடலில் மருந்து திரள்கிறது: நச்சு அறிகுறிகள் திடீரெனத் தோன்றுகின்றன. இத்தகைய திரள் வினைபுரியும் மருந்துகளுக்கு பார்பிட்டுரேட், ஸ்டிரைக்னின், பாதரச உப்புகள் ஆகியவை எடுத்துக்காட்டுகள்.

cuneus : ஆப்பு எலும்பு : பின் உச்சிமண்டை எலும்பு, குதிமுள் போன்ற பிளவுகள் சூழ்ந்த மூளைக் கோளங்களின் இரு பக்கங்களிலுள்ள புறமடல்.

cuniculus : புறத்தோல்வளை : புறத்தோலிலுள்ள சிரங்குப் பூச்சியின் வலை.

cuprophane : செல்லுலோஸ் சவ்வு : இரத்தக் கலவைப் பிரிப்பில் பயன்படுத்தப்படும் ஒரு செல்லுலோஸ் சவ்வு.

cupping : குருதி வாங்குதல்; கிண்ணக்குழி : காற்று நீக்கப்பட்ட கண்ணாடிக் குமிழ் உதவியால் குருதி வாங்குதல்.