பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cushing's disease

cyanopsia


cushing's disease : பருமன் நோய் : கபச் சுரப்பியில் ஒரு கட்டி காரணமாக அளவுக்கு மீறிக் கார்ட்டிசோல் உற்பத்தியாவதன் விளைவாக அரிதாக ஏற்படும் மட்டுமீறிய உடல் பருமன். இது பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படுகிறது.

cushing's reflex : நாடித்துடிப்பு வீழ்ச்சி : இரத்த அழுத்தம் அதி கமாகி, நாடித்துடிப்பு வீழ்ச்சியடைதல். இது மூளைப் பகுதியில் நைவுப்புண் காரணமாக இது உண்டாகிறது.

cushing's syndrome : குஷிங் நோய் : அண்ணீரக மிகையணு வளர்ச்சி சார்ந்த கபத்தினால் உண்டாகும் ஒரு நோய். இதில் வெளிர் முகம், பைத்தியம், முகப்பரு, குருதிமிகை, இடுப்பு பருமன், மிகை அழுத்தம், நிறமிக் கோடுகள், எலும்பு மெலிவு, வயிற்றுப்புண், மாத விடாய்கோளாறு, காயம் எளிதில் குணமாகாதிருத்தல், எளிதில் நோய் தொற்றுதல் போன்றவை உண்டாகும்.

cusp : பற்குவடு; குமிழ்; முனை; கதுப்பு இதழ் : பல்லின் நுனி போன்ற முனைப்பகுதி.

cutaneous : தோல்சார்ந்த; தோல் உணர்வு; சரும : உடல் தோல் சார்ந்த.

cutdown : சிரைப்பிளப்பு : நரம்பு வழியாகத் திரவங்களை அல்லது மருந்துகளைச் செலுத்துவதற்குக் குழாய் கருவியை அல்லது ஊசியைச் செருகுவதற்காக ஒரு சிரையைப் பிளத்தல்.

cuticle : மேல்தோல்; புறத்தோல்; சிறுசருமம்; மீந்தோல் : நகத்தைச் சுற்றியுள்ளது போன்ற தோலின் மேலீடான புறத்தோல்.

cutireaction : தோல் அழற்சி : தோலில் ஏற்படும் ஒரு வீக்கம் அல்லது எரிச்சல்.

cutis : மெய்த்தோல் : தோல்; மேல்தோல், உள்தோல் அடங்கிய உடலை முடியுள்ள காப்புக் கவசம்.

cyanhaemoglobin : சயான ஹேமோகுளோபின் : சயனைடு நஞ்சூட்டத்தில் நீலமெத்திலீன் உட்செலுத்திய பிறகு உண்டாகும் சயனைடு மற்றும் மெத்தோ குளோபின் கலந்த ஒரு கூட்டுப் பொருள்.

cyanobacteria : சயானோபாக்டீரியா : பாக்டீரியா அடங்கிய பச்சையம்.

cyanocobalamin : சயானோகோ பாலமின் : ஈரல், மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் B, இரத்தச் சிவப்பணுக்கள் முதிர்ச்சியடைவதற்கு இது தேவைப்படுகிறது.

cyanophil : சயானோபில் : கரைப்பட்டதும் நீலநிறமடையும் நீர் உயிரணு.

cyanopsia : சயானோப்சியா : எல்லாப் பொருள்களும் நீலநிற