பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cyanosis

350

cyclocryotherapy


மாகத் தோன்றும் ஒரு கோளாறு. கண்புரை அகற்றிய பிறகு தற்காலிகமாக இது ஏற்படலாம்.

Cyanosis : தோல் நீலம்; நீல வேற்றம்; நீலத்தன்மை; நீலம் பூரித்தல்; நீலமை : ஆக்சிஜன் சரிவர ஊட்டம் பெறாத குருதி சுழல்வதனால் தோல் நீல நிறமாகக் காணப்படும் நோய்.

cybernetics : தண்ணாள்வியல் : 1. கணிகளையும் நரம்பு மண்ட லத்தையும் ஒப்பாய்வு செய்தல். 2. கட்டுப்பாட்டு மற்றும் செய்தித் தொடர்பு பற்றிய அறிவியல்.

cyclamates : சைக்ளாமேட்ஸ் : சைக்ளாமிக் அமிலத்தின் உப்பு. இது சர்க்கரையைப் போல் 30 மடங்கு இனிப்புடையது. வெப்பத்தில் உறுதியாக இருக்கக் கூடியது. இது புற்று நோய் உணடாக்கக் கூடியது என ஐயுறப்படுவதால் உணவுப் பொருள்களில் சேர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

cyclandelate : சைக்ளாண்டிலேட்; குருதிநாள விரிவகற்சி மருந்து : குருதி நாள விரிவகற்சி செய்கிற மருந்து நரம்பு தளர்த்து மருந்து.

cyclical vomiting : காலமுறை வாந்தி; தொடர்வாந்தி; சுழல் வாந்தி :குழந்தைகளுக்குக் கால முறையில் ஏற்படும் நோய்.

cyclimorph 10 : சைக்ளிமார்ஃப் 10 : வாந்தி, குமட்டல் இல்லாமல் நோவு தீர்ப்பதற்காக ஊசிமூலம் செலுத்தப்படும் மருந்து. இதன் மி.லி கரைசலில் 10 மி.கி மார்ஃபின் டார்ட்ரேட்டும், 50மி.கி. சைக்ளிசிங் டார்ட் ரேட்டும் அடங்கியிருக்கும்.

cyclitis : கண்படல வீக்கம்; விழிக் கருத்திரை அழற்சி : பின்புற விழி வெண்படலத்திலுள்ள வெண் உயிரணுக்களின் சிறு சிறு தொகுதிகள் படிவதால் உண்டாகும் கண்படல வீக்கம். இது பெரும்பாலும், விழித்திரைப் படலத்தில் ஏற்படும் வீக்கத்துடன் சேர்ந்து உண்டாகிறது.

cyclizine : சைக்ளிசின் (எதிர் விழுப்புப் பொருள்) : ஹிஸ்டமின் எனும் விழிப்புப் பரவிச் செயலாற்றாது தடுக்கும் மருந்து. ஒவ்வாமைக்கு எதிர் மருந்து. வாந்தியை கட்டுப்படுத்தும்.

cyclobarbitone : சைக்ளோபார் பிட்டோன் : உறக்கம் வருவது தாமதமாகும்போது பயன்படுத் தப்படும், குறுகிய காலம் செயற்படும் பார்பிட்ரேட் மருந்து.

cyclochoroiditis : கண்கரும்படல அழற்சி : கண்ணிமையும், கண் கரும்படலமும் வீக்கமடைதல்.

cyclocryotherapy : வெள்விழி ஆய்வு : கண்விழி விறைப்பு நோயின்போது கண்ணிமைப் பகுதி அருகிலுள்ள புறச்சவ்வில் ஒர் உறை ஆய்வு கருவியைச் செலுத்துதல்.