பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cyclodialysis

351

cyclosporin


cyclodialysis : கண்வாதச் சவ்வூடு பிரிப்பு : கண்விரி விறைப்பு நோயில் கண்கூட்டினுள் அழுத்தத்தைக் குறைப்பதற்குப் புற அறைக்கும் கண் கரும் படலத்துக்குமிடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்துதல்.

cyclodiathermy : அகமின் வெப்ப மருத்துவம் : கண்விழி விறைப்பு நோய்ச்சிகிச்சையில் கண்ணிமையில் அகமின் வெப்ப மூட்டு தலைப் பயன்படுத்துதல்.

cyclogy : சைக்ளோஜில் : சைக்ளோப்பெண்டோலேட் ஹைட்ரோ குளோரைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.

cycloid : நெறிவட்டம் : 1. ஒரு வட்டத்தை ஒத்திருத்தல். 2. அணுக்களின் ஒரு வளையம். 3. மனப்போக்கில் குறிப்பிட்ட மாறுபாடு.

cyclopentolate hydrochloride : சைக்ளோபென்டோலேட் ஹைட்ரோ குளோரைடு : முறுகுதசை வேதனையைத் தணிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து.

cyclophoria : கண்சுழற்சி : சாய்வான தசைகளின் பலவீனம் காரணமாக கண்கள் அவற்றின் முன்பின் அச்சினைச் சுற்றிச் சுழலும் போக்கு.

cyclopia : ஒற்றைக்கண் பார்வை நோய் : வளர்ச்சியின்போது இரு கண்களின் சுழற்சியும் ஒருங்கிணைந்து ஒற்றைக்கண் பார்வை உண்டாதல்.

cycloplegia : கண்வாதம் : கண் தசைகளில் ஏற்படும் வாதம்.

cycloplegics : கண் வாத மருந்து; சூழலி வாதம் சார்ந்த : கண் தசையில் வாதமுண்டாக்கும். ஆட்ரோப்பின் (ஹாம்ட்ரோப்பின்), ஸ்கோப்போலாமைன், லாக்செசின் போன்ற மருந்துகள். கருவிழி மையப் பாப்பா எனப்படும் பாவை துவாரத்தைக் குறுக்கவும் விரிவாக்கவும் செயல்படும் தசைகளை இயங்காமல் செய்யும் மருந்து.

cyclopropane : சைக்ளோப்ரோப்பேன் : மயக்க மருந்தாகப் பயன் படுத்தப்படும் வாயு. எளிதில் தீப்பற்றக்கூடியது. இதைப் பயன்படுத்துவது இன்று பெரும்பாலும் நிறுத்தப்பட்டுவிட்டது.

cyclops : நெற்றிக்கண் : 1. நெற்றியில் மட்டும் ஒற்றைக்கண்ணு டைய ஒர் அரக்கப் பிராணி. 2. கருவில் உண்டாகும் ஒற்றைக்கண் கோளாறு.

cycloserine : சைக்ளோசெரின் : பல நுண்ணுயிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். நோய் நுண்ணுயிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். நோய் நுண்மத் தடைமருந்து.

cyclosporin : சைக்ளோஸ் போரின் : நோய்த்தடைக் காப்பு மருந்து. இது நோய் எதிர்ப்