பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cyclothymia

352

cysteamine


பொருள்கள் உற்பத்தியாவதைத் தடைசெய்வதில், காசநோய்க் கூட்டு மருந்துகளுடன் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது.

cyclothymia : ஊசல் மனநிலை; சுழல் உள்ளம் : பெரும் உற்சாகத் திற்கும் சோர்வுக்கும் மாறி மாறி வரும் மனநிலை.

cyclotomy : கண்பாவை அறுவை மருத்துவம் : கண்விழி விறைப்பு நோயைக் குணப்படுத்துவதற்கான அறுவைச் சிகிச்சை, கண்ணிமையில் கீறல் ஏற்படுத்தி இது செய்யப்படுகிறது.

cyclotron : சைக்ளோட்ரான் : கதிரியக்க ஓரகத் தனிமங்களைத் (ஐசோடோப்) தயாரிப்பதற்கான ஒரு கருவி.

cyesis : கருப்பம் (சூல்); கருவுறல் சூல் : ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள் என்பதைக் காட்டும் அறிகுறிகள்.

cylindroma : குருதிக் குழாய் கட்டி; உருளைப்புற்று : வியர்வைச் சுரப்பி, உமிழ்நீர்ச் சுரப்பி போன்றவற்றின் குருதிக் குழாய் உள்வரிச் சவ்வில் ஏற்படும் கட்டி.

cylin : சைல்லின் : கறுப்புத்திரவ வகையைச் சேர்ந்த நோய்த் தொற்றுத் தடுப்பு மருந்தின் வணிகப் பெயர்.

cynomel : சைனோமெல் : லியோத்தை ரோமைன் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

cyproterone : சைப்ரோட்டெரோன் : ஆண்பால் இயக்கு நீர்மத்தைக் குறைக்கும் மருந்து. இது மட்டுமீறிய பாலுணர்வினைக் குறைப்பதற்குப் பயன் படுத்தப்படுகிறது.

cyrtometer : வளைவு அளவு மானி : உடலின் வளை பரப்புகளை அளவிடுவதற்கான ஒரு கருவி.

cyst  : நீர்க்கட்டி; நீர்ப்பைமுண்டு; பந்து; திசுப்பை : உடலிலுள்ள கழிவுநீர்களைக் கொண்ட பை போன்ற கட்டி.

cystadeno carcinoma : சுரப்பிக் கட்டி : சுரப்பி மேல் திசுவிலிருந்து உண்டாகும் உக்கிர வேகக் கட்டி

cystadenoma : சுரப்பி நீர்க்கட்டி; பந்துக் கோளப் புத்து : சுரப்பித் திசுக்களில் ஏற்படும் நீர்க்கட்டி போன்ற வளர்ச்சி. பெண்களின் மார்பகத்தில் இது ஏற்படக் கூடும்.

cystalgia : சிறுநீர்ப்பை நோவு; சிறுநீர்ப்பை வலி : சிறுநீர்ப்பையில் ஏற்படும் வலி.

cystathioninuria : தயோனின் மிகுதிக்கோளாறு : இது ஒரு பரம்பரை நோய். இது சுரப்பித் தயோனினை வளர்சிதை மாற்றம் செய்யும் திறனைக் குறைக்கிறது. இதனால் இரத்தத்திலும், திசுவிலும், சிறுநீரிலும் தயோனின் அளவை அதிகரிக்கிறது. இது மனக்கோளாறுடன் தொடர்பு உடையது.

cysteamine : சிஸ்டியாமின் : ஈரல் சேதத்தைக் குணப்படுத்த நரம்பு