பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cystitomy

354

cystoplasty


cystitomy : விழியுறைத் துளை : 1. ஒரு குழிவில் அறுவைச் சிகிச்சை மூலம் துளையிடுதல். 2. விழியாடி உறையினுள் துளையிடுதல்.

cystocele : சிறுநீர்ப்பைச் சரிவு; அல்குலில் சிறுநீர்ப்பை பிதுக்கம் : சிறுநீர்ப்பையின் பிற்பகுதிச் சுவர், யோனிக்குழாயின் முன்புறச் சுவர் மீது சாய்ந்திருத்தல்.

cystocoete : சிறுநீர்க் குழாய் இறக்கும் : சிறுநீர்ப்பையினை யோனிக்குழாயினுள் இறங்கி விடுதல்.

cystoelytroplasty : சிறுநீர்ப்பை-யோனிக் குழாய் புரை அறுவை : சிறுநீர்ப்பை-யோனிக்குழாய் புரையோட்டினை அறுவைச் சிகிச்சை மூலம் சீர்செய்தல்.

cystography : சிறுநீர்ப்பை ஊடு கதிர்ச்சோதனை; சிறுநீர்ப்பை வரைவியல் : சிறுநீர்ப்பையை ஊடுகதிர் படமெடுப்பு மூலம் பரிசோதனை செய்தல்.

cystojejunostomy : சிறுகுடல் நீர்க்கட்டி அறுவைச் சிகிச்சை : இடைச்சிறுகுடலுடன் இணைந்து இருக்கும் நீர்க்கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.

cystolithectomy : சிறுநீர்ப்பைக் கல் அறுவை : ஒரு சிறுநீர்ப்பையின் சுவரில் துளையிட்டு அதிலுள்ள கல்லை அகற்றுதல்.

cystolithiasis : சிறுநீர்ப்பைக்கல் : சிறுநீர்ப்பையில் கல் அல்லது கற்கள் இருத்தல்.

cystology :உயிர்மவியல் : உயிர்மங்களைப் பற்றி ஆயும் உயிரியல் பிரிவு.

cystolysis : உயிர்மக் கூறுபாடு.

cystometer : சிறுநீர்ப்பை ஆய்வுமானி : சிறுநீர்ப்பை செயற்படும் முறையை ஆராய்ந்தறிவதற்கான ஒரு சாதனம். இது சிறுநீர்ப்பையின் கொள்ளளவு, உள்அழுத்தம், எச்சச்சிறுநீர் ஆகியவற்றை அளவிடுகிறது.

cystometer : சிறுநீர்ப்ப்பை அழுத்தமானி; சிறுநீர்ப்பை அளவி : சிறு நீர்ப்பையில் பல்வேறு நிலைகளில் அழுத்தத்தை அளவிடுவதற்கான கருவி.

cystometry : சிறுநீர்ப்பை அழுத்தவியல்; சிறுநீர்ப்பை அளவு : சிறு நீர்ப்பையில் பல்வேறு நிலைகளில் அழுத்த மாறுபாடுகள் குறித்து ஆராய்தல்.

суstoреху : சிறுநீர்ப்பைப் பிணைப்பு : பித்தப்பையை அல்லது சிறுநீர்ப்பையை அடி வயிற்றுச்சுவற்றுடன் அல்லது பிற ஆதாரப் பகுதிகளுடன் அறுவைச் சிகிச்சை மூலம் இணைத்தல்.

cystoplasty : சிறுநீர்ப்பை அறுவை மருத்துவம்; சிறுநீர்ப்பை சீரமைப்பு; சிறுநீர்ப்பை அமைப்பு : சிறுநீர்ப்பைக் கோளாறினை